அண்மைய செய்திகள்

recent
-

வலி.வடக்கு காணிகள் நிரந்தரமாக கபளீகரம் முகாம் மக்களுக்கு வேறு பகுதியில் வீடுகளை அமைக்கிறது இராணுவம்...


வலி.வடக்கில் மக்களுடைய காணிகளை நிரந்தரமாக கபளீகரம் செய்வதற்கு மேலும் 200 வீடுகளை அமைத்து அங்கு முகாம் மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபட்டு வருகி ன்றது. இந்த நடவடிக்கையின் மூலம் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதாக வெளியுலகத்திற்கு காண் பித்து ஏற்கெனவே தங்களது கட்டுப் பாட்டில் உள்ள மக்களுடைய காணிகளை அபகரிக்கும் சூழ்ச்சியில் இராணுவம் தற்போது இறங்கியுள்ளது.

கீரிமலையில் உள்ள காணி ஒன்றில் நூறு வீடுகளை அமைத்து, அத ற்கு நல்லிணக்கபுரம் என பெயரும் சூட்டி நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த 100 குடும்பங்களை அங்கு குடியமர்த்தியிருந்தனர். இவ்வாறு குடியேற்றப்பட்டவர்கள், இராணுவம் பிடித்து வைத்துள்ள நிலங்களில் குடியிருந்த போதிலும், அவர் களுக்கு காணிகள் இல்லாமையால் இலவசமாக வீடு கிடைக்கின்றது என்ற ஆறுதலில் இராணுவத் தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்கபுரத்தில் குடியிருக்க சம்மதம் தெரிவித்தனர்.

எனினும் தற்போது இராணுவத்தினரால் கட்டப்பட்டு வழங்கப்பட்ட வீடுகளில் குடியிருக்க தமக்கு கஷ்டமாக இருக்கின்றது எனவும், தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை காணப்படு வதாகவும் தெரிவித்துள்ள நல்லிணக்கபுர மக்கள், தமது சொந்த நிலங்களில் மீள குடியமர விரும்பு வதாகவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் மேலும் 200 வீடுகளை கட்டி அங்கு முகாம் மக்களையும் குடியேற்ற இராணுவம் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு இராணுவம் கட்டவுள்ள வீடுகளுக்கான காணிக ளும் அடையாளம் காணபட்டுள்ளன. காங்கேசன்துறை சீமெந்து ஆலைக்கு சொந்தமான வித்தகபுரம், நகுலேஸ்வரம் ஆகிய பகுதிகளில் உள்ள காணிகளிலேயே வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

ஏற்கெனவே இந்த காணிகளை சீமெந்து ஆலையினர் கைக்கொள்ளும் போது காணி உரிமையாளர் களுக்கான நஷ்ட ஈடு இதுவரை முழுமையாக வழங்கவில்லை. மேலும் வித்தகபுரம், நகுலேஸ்வரம் பகுதிகளில் காணி இல்லாத குடும்பங்கள் உள்ளன.

இவ்வாறு மேற்படி பகுதிகளில் காணி இல்லாமல் வசிக்கும் குடும்பங்களுக்கே அந்த காணிகள் பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என தெல்லிப்பளை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்மானங்களையும் மீறியே இராணுவம் அப்பகுதியில் வீடுகளை அமைத்து முகாம்களில் வாழும் மக்களுக்கு வழங்கவுள்ள தாக அறியமுடிகின்றது.
இதுதொடர்பில் வலி. வடக்கு மீள் குடியேற்றம் குழுவின் தலைவரும் முன்னாள் உப தவிசாளருமான எஸ். சஜீவன் வலம்புரிக்குத் தெரிவிக்கையில்,

வலி.வடக்கில் தற்போது இராணுவம் 4 ஆயிரத்துக்கு அதிகமான ஏக்கர் நிலப்பரப்பை உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் ஆக்கிரமித்து வைத்துள்ளது. இந்த நிலத்துக்கு சொந்தமான மக்களே தற்போது நலன்புரி முகாம்களில் கடந்த 27 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் முகாம்களில் உள்ள மக்களை வேறொரு இடத்தில் மீள குடியமர்த்திவிட்டால், அவர்கள் தமது காணிகளை கோரமாட்டார்கள் என்ற எண்ணத்தில்,

குறித்த இரானுவத்தின் 200 வீட்டுதிட்டம் அமையவுள்ளது. இந்த திட்டம் நிறைவேறிய பின்னர் முகாம்களில் உள்ள மக்கள் தொகை குறைவடையும், ஆகவே மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படுகின்றது என்ற தோற்றப்பாட்டை வெளியுலகத்திற்கு அரசு காண்பிக்கும் என தெரிவித்துள்ள சஜீவன், மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுப்பதற்கு வடக்கு மாகாண சபையும், மாவட்ட செயலகமும் இருக்கும் போது இராணுவம் முந்திகொள்வது எதற்காக எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.   

வலி.வடக்கு காணிகள் நிரந்தரமாக கபளீகரம் முகாம் மக்களுக்கு வேறு பகுதியில் வீடுகளை அமைக்கிறது இராணுவம்... Reviewed by Author on March 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.