அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அமைதி பேரணி.... மகஜர் பெற்றுக்கொண்டார் அரசாங்க அதிபர்...மக்கள் கவலை...முழுமையான படங்கள் இணைப்பு...



மன்னாரில்  அமைதி பேரணி  மகஜர் பெற்றுக்கொண்டார் அரசாங்க அதிபர்...மக்கள் கவலை...
இலங்கையில் வாழும் தமிழனுக்கு போராட்டம் தான் வாழ்வு என்ற நிலையாகி விட்டது எதற்கு எடுத்தாலும் போராட்டம் 30ஆண்டுகளாக ஆயுதப்போராட்டம் அது மௌனித்து போக தற்போது  தனது அடிப்படை வாழ்வாதார உரிமைக்காக  பலபாகங்களிலும் பலதேவைகளை கருத்தில் கொண்டு அறவழியில் போராடி வருகின்றனர்....
 அதுவும் அமைதியாக....அவ்வாறே மன்னார் மாவட்டத்திலும் அண்மைக்காலமாக  அறவழிப்போராட்டங்கள் அமைதி போராட்டம் கண்டனப்பேரணி கறுப்பு துக்கதினம் என பலபோராட்டங்கள்......
  • காணாமல் போனோர் காணாமல் ஆக்கப்ப்ட்டோர்.
  • வேலையில்லாப்பட்டதாரிகள்.
  • காணி மற்றும் நில மீட்பு.
  • மீனவர்கள் பிரச்சினை.
  •  மீள்குடியேற்றம்
விழிப்புனர்வு பேரணிகள்  இவ்வாறான பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் முடிவில் தங்களது தேவைகளை குறிக்கோளை முக்கிய அம்சங்களை தெளிவுபடுத்திய மகஜரை மன்னார் மாவட்டத்தின் அரசாங்க அதிபர் அவர்களிடம் கையளிப்பது வழக்கம் அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ ஏனைய சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கோ அனுப்பிவைப்பது வ்ழக்கம்.
அந்த வகையில் இன்றும் நிலமீட்பு சம்மந்தமான மகஜருடன்  மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர்  கிங்ஸ்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களின் தலைமையில் மறைமாவட்ட குருமுதல்வர் பங்குகளின் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் பாதிகப்பட்ட மக்கள் என பெரும்திரளான மக்கள் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இருந்து கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அமைதியான முறையில்...

பேரணியாக மன்னார் கச்சேரி பிரதான நுழைவாயிலை அடைந்ததும்  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உயர் திரு.எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவர்கள் மிகவும் வேகமாக வந்து கைலாகு கொடுத்துவிட்டு சிறிது நேரம்  மகஜரில் உள்ள தமது அவல நிலை வாசிக்க கேட்ட்டவர் ஆண்டகை அவர்கள் மகஜரினை கையளிக்க பெற்றுக்கொண்டதும் வந்த வேகத்திலே  மீண்டும் அலுவலகத்துக்குள் சென்றுவிட்டார்....

 இது சரியான செயலா....??? மன்னார் மாவட்டதின் உயரிய பதவியில் உள்ள அரசாங்க அதிபர் மகஜரை பெற்றுக்கொண்டு  தன்னால் இயன்றவரை பிரச்சினைக்காண தீர்வினை பெற்றுகொடுக்க முனைகிறேன் என உறுதிபட ஆரோக்கியமான பதிலை வழங்கவேண்டும்  அதைவிட்டு சும்மா கடமைக்கா வந்து நின்றுவிட்டு மகஜரினை பெற்றுக்கொண்டு செல்வது மக்களுக்கு பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளது . மகஜரை உரியவர்களுக்கு அனுப்புகின்றாரா...... இல்லை குப்ப்பைத்தொட்டியில் வீசுகின்றாரா.....??? இதுவரை எத்தனை மகஜரை வழங்கி இருக்கின்றோம் அத்தனையும் ஒரு வேளை குப்பைத்தொட்டியில் தானே.... எனசந்தேகம் எழுகின்றது மக்களுக்கு.... இவ்வாறான செயட்பாடூகளினால் மக்கள் மாணவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் எமாற்றமும் கவலையும் விரக்தியும் அடைகின்றனர்...இனிவருகின்ற காலங்களிலாவது  மக்களின் துன்பத்தினை கருத்தில் கொண்டு உடனடி தீர்வினை எடுத்துச்சொல்லுங்கள் மேற்கொள்ளுங்கள்.

இலங்கை கடற்படையினர் வசமுள்ள மக்களின் குடியிருப்பு நிலங்களை விடுவிக்ககோரி மன்னார் ஆயர் இல்லத்தின் ஏற்பாட்டினால் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் முள்ளிக்குளம் மக்களின் காணி விடுவிப்புக்கோரி மன்னார் மறை மாவட்ட பங்கு மக்கள் மன்னார் நகரில் மாபெரும் போராட்டம் ஒன்றை இன்று புதன்கிழமை (19.04.2017) முன்னெடுத்தனர்.

இன்று புதன் கிழமையுடன் (19.04.2017) மன்னார் மாவட்ட முள்ளிக்குளம் தமிழ் மக்கள் தங்கள் பூர்வீக குடியிருப்புக் காணியை விடுவிக்கக்கோரி மரிச்சுக்கட்டி பகுதியில் கடற்படை முகாமுக்கு முன்பாக ஈடுபட்டுவரும் சாத்வீக போராட்டம் இன்றுடன் 28வது நாட்களை எட்டியுள்ளது.

இவர்களின் இவ் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமுகமாக இன்று புதன் கிழமை (19.04.2017) மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் எற்பாட்டில் மாபெரும் ஊர்வலம் ஒன்று இடம்பெறுவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
முள்ளிக்குளம் மக்களின் காணியை விடுவிக்கக்கோரி மன்னார் மறை மாவட்டத்தில் தீவுக்குள் அமைந்துள்ள அனைத்து பங்குகளுடன் மன்னார் பெரும்நிலப் பரப்பிலுள்ள அதிகமான பங்குகளும் இணைந்து இவ் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணி, மன்னார் மாவட்டத்தில் கடற்படையினரின் வசமுள்ள முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்களை விடுவிக்கக்கோரியும், மக்களின் நிலங்களை விட்டு படையினரை வெளியேற கோரியும், முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் மன்னார் புனித செபஸ்த்தியார் பேராலயத்தில் ஆரம்பமான இந்த பேரணி இறுதியாக மன்னார் மாவட்ட செயலக நுழைவாயிலை சென்றடைந்தது.

இந்த பேரணியின் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, அருட்தந்தையர்கள், மற்றும் மன்னார் மறைமாவட்ட மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந்த பேரணிக்கு, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜீ.குணசீலன், எஸ்.பிரிமூஸ் சிறாய்வா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

இதே வேளை முள்ளிக்குளம் மக்கள் சார்பாக ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட கடிதம், மன்னார் ஆயர் இல்லத்தினூடாக மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளையால், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













































மன்னாரில் அமைதி பேரணி.... மகஜர் பெற்றுக்கொண்டார் அரசாங்க அதிபர்...மக்கள் கவலை...முழுமையான படங்கள் இணைப்பு... Reviewed by Author on April 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.