அண்மைய செய்திகள்

recent
-

இந்து சமய பாடப் புத்தகங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு நியமனம்



இந்து சமய பாடப் புத்தகங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கல்வி ராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஸ்ணன் தலைமையில் இந்தக்குழு செயற்பட உள்ளது.

இந்து சமயம் குறித்த பாடசாலை பாடப் புத்தகங்களில் பல்வேறு பிழைகள் குறைபாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கல்வி ராஜாங்க அமைச்சில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய பாடசாலை பாடப் புத்தகங்களில் காணப்பட்ட பிழைகள் கடந்த ஆண்டு சில சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டதாக அமைச்சர் ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை இந்து சமய ஆசிரியர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்ற ஏனைய உறுப்பினர்களாவர்.

இந்து சமய பாடப் புத்தகங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு நியமனம் Reviewed by Author on April 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.