அண்மைய செய்திகள்

recent
-

புத்தாண்டு தினத்திலும் தமக்கு தீர்வும் இல்லை, நிம்மதியும் இல்லை என தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 50 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்படி கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா கந்தசாமி கோவிலில் மன்றாட்டத்துடன் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் போனோரின் உறவுகள் அங்கிருந்து ஊர்வலமாக கடை வீதிவழியாக ஹொரவப்பொத்தான வீதியை வந்தடைந்து, பின்னர் அங்கிருந்து கண்டிவீதிக்குச் சென்று உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெறும் இடத்தினை வந்தடைந்தனர்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியா கந்தசாமி கோவிலில் கண்ணீர் மல்கி கதறி அழுது வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த போது அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா வர்த்தகரொருவர் போராட்டக்காரர்களுடன் முரண்பட்டுக்கொண்டதுடன், ஊடகங்களுக்காகவே இவர்கள் போராட்டம் செய்வதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து அங்கிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குறித்த நபருடன் தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில் அவர் அங்கிருந்து வேகமாக வெளியேறி சென்றிருந்தார். இச்சம்பவம் மேற்படி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் மத்தியில் கடும் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன், தமது போராட்டத்தினைக் கொச்சைப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.



புத்தாண்டு தினத்திலும் தமக்கு தீர்வும் இல்லை, நிம்மதியும் இல்லை என தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர். Reviewed by NEWMANNAR on April 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.