அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மிகவும் வயதான நபர்: மறுக்கப்பட்ட கின்னஸ் சாதனை -


சிலி நாட்டவரான 121 வயது முதியவர் உலகின் மிகவும் வயதான நபர் என்பது ஆவணங்களை பரிசோதித்த அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிலி நாட்டில் குடியிருந்து வரும் Celino Villaneuva Jaramillo என்பவரே அந்த முதியவர். 1896 ஆம் ஆண்டு பிறந்த இவர், தற்போதைய மிகவும் வயது முதிர்ந்தவர் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரரான Nabi Tajima என்பவரை விட 4 ஆண்டுகள் முன்னதாக பிறந்துள்ளார். சிலி மக்களால் டான் செலினோ என் செல்லமாக அழைக்கப்படும் இவர் தமது 99 ஆம் வயதில் இருந்தே உறவினருடன் வசித்து வருகிறார்.

தமது வீடு தீக்கிரையானதால் பிறந்த நாள் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அதுவரையான சேமிப்பையும் இழந்து தவித்த செலினோ, படிப்படியாக பின்னர் வாழ்வாதாரத்தை மீட்டுள்ளார்.
இருப்பினும் சிலி அரசாங்க ஆவணங்களில் செலினொவின் வயது சந்தேகத்துக்கு இடமின்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.

1896 ஆம் ஆண்டு யூலை 25 ல் பிறந்த செலினோ இன்னமும் உயிருடன் இருப்பதாகவும் அரசாங்க ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை திருமணம் செய்து கொள்ளாத செலினோ, தமது 80-வது வயது வரை தொடர்ந்து 30 ஆண்டுகள் ஒரு முதலாளியின் கீழ் வேலை பார்த்து வந்துள்ளார்.
பின்னர் வேறு நகரம் ஒன்றில் குடிபெயர்ந்த செலினோ அங்கு காய்கனிகளை விற்று பிழைப்பு நடத்தியுள்ளார்.
அப்போது அவரது குடியிருப்பு தீக்கிரையாகவே, அதன் பின்னர் தமது உறவினருடன் வசித்து வருகிறார்.

பூமியில் தற்போது அதிக வயதான நபர் என வாழ்ந்துவரும் செலினோவுக்கு 90 சதவிகிதம் பார்வை பறிபோயுள்ளது, மட்டுமின்றி கேட்கும் திறனையும் இழந்துள்ளார். உத்தியோகப்பூர்வ ஆவணங்கள் இல்லை என்பதால் செலினோ கின்னஸ் சாதனை பட்டியலில் இடன்பெறாமல் போயுள்ளார்.
உலகின் மிகவும் வயதான நபர்: மறுக்கப்பட்ட கின்னஸ் சாதனை - Reviewed by Author on November 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.