அண்மைய செய்திகள்

recent
-

"சிறுபான்மை இனங்கள் பிரச்சினைகளை தட்டிக் கேட்க வேண்டும்"


தமிழ் மற்­றும் முஸ்­லிம் மக்­க­ளா­கிய நாங்­கள் தமிழ் பேசு­கின்­ற­வர்­க­ளாக அடக்கி ஒடுக்­கப்­பட்ட சிறு­பான்மை இனங்­கள் என்ற அடிப்­ப­டை­யில் எங்­க­ளுக்­கான பொது­வான பிரச்­சி­னை­க­ளைத் தட்­டிக்­கேட்­கின்ற தைரி­யத்­து­டன் முன் செல்­ல­வேண்­டும். இவ்­வாறு தெரி­வித்­தார் வவு­னியா மாவட்ட இலங்­கைத் தமி­ழ­ர­சு­கட்­சி­யின் தலை­வ­ரும் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான மருத்­து­வர் ப.சத்­தி­ய­லிங்­கம். வவு­னியா மாவட்ட முஸ்­லிம்­க­ளுக்­கும் இடையே சிறப்புச் சந்­திப்பு ஒன்று இடம்­பெற்­றது.

இந்­தச் சந்­திப்­பில் கலந்­து­ கொண்டு கருத்­துத் தெரி­வித்த போதே ப.சத்­தி­ய­லிங்­கம் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­த­தா­வது:
கடந்த காலத்­தில் இடம்­பெற்ற கசப்­பான விட­யங்­களை மறந்து வவு­னி­யா­வில் தமிழ் மக்­கள் முஸ்­லிம் மக்­க­ளின் நல்­லு­ற­வைக் கட்­டி­யெ­ழுப்­ப­வேண்­டும்.
இன்­றைய இந்­தக் கலந்­து­ரை­யா­டலை மேற்­கொள்­ள­வி­ட­மால் பலர் தடுக்கின்ற னர் என என்­னி­டம் தெரி­விக்கப்பட்டது. வடக்கு மாகா­ண­ச­பை­யின் தேர்­த­லின்­போது எனக்கு மூவின மக்­க­ளி­னு­டைய வாக்­கு­க­ளும் கிடைத்­தன.

எனது வெற்­றிக்­காக முஸ்­லிம் நண்­பர்­கள் பலர் என்­னு­டன் வீடு வீடாக நடந்து திரிந்­துள்­ள­னர். சிறு­பான்மை இனத்­த­வர்­கள் என்ற ரீதி­யில் எங்­க­ளுக்குப் பொது­வான பல பிரச்­சி­னை­கள் உள்­ளன. பொது­வான தேவை­கள் நிறைய இருக்­கின்­றன.
"சிறுபான்மை இனங்கள் பிரச்சினைகளை தட்டிக் கேட்க வேண்டும்" Reviewed by Author on November 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.