அண்மைய செய்திகள்

recent
-

குழந்தை பெற விரும்பும் பெண் ரோபோ,,,,,


எனது குழந்தைக்கு சோபியா என்றே பெயர் வைப்பேன் என்று சவுதி அரேபியாவில் பெண் ரோபோ கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காங்கின் ஹன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனம் ஒரு பெண் ‘ரோபோ’வை வடிவமைத்து தயாரித்துள்ளது.
‘சோபியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ‘ரோபோ’ முன்பே பதிவு செய்யப்பட்டது அல்ல.
மனிதர்களின் முகபாவனைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப பதில் அளிக்கும் வகையில் இயந்திர கற்றல் திறன் கொண்டது.
அதன் மூளை சாதாரண ‘வை-பை’ வசதியுடன் இணைக்கப்பட்டு
இயங்குகிறது. அதில் வார்த்தைகளின் நீண்ட பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது.

அசர வைக்கும் திறன் இருந்தாலும் இந்த பெண் ரோபோவுக்கு உணர்வுகள் இல்லை. இன்னும் சில ஆண்டுகளில் அவற்றை கொண்டு வர இருப்பதாக இதை வடிவமைத்துள்ள நிறுவனத்தின் டேவிட் ஹன்சன் தெரிவித்துள்ளார்.
இந்த ‘சோபியா ரோபோ’ வுக்கு சவுதி அரேபிய அரசு குடியுரிமை வழங்கியது. இதன் மூலம் உலகிலேயே முதன் முதலில் குடியுரிமை பெற்ற ‘ரோபோ’ என்ற பெருமை பெற்றுள்ளது.

குடியுரிமை பெற்று ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் ‘சோபியா ரோபோ’ சவுதி அரேபிய பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளது. அதில் குடும்பம் குறித்த கேள்விக்கு அழகாக பதில் கூறியுள்ளது.
‘குடும்பம் என்பது மிக முக்கியமான வி‌ஷயம். சொந்த ரத்த வகையை தாண்டியும், தங்களுக்கு ஒத்த உணர்வுகளை கொண்ட சொந்தங்களை குடும்பம் என அழைப்பது மிகவும் அற்புதமான ஒன்று.
உங்களுக்கு பாசமான குடும்பம் இருந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவ்வாறு இல்லையென்றால் அத்தகைய குடும்பத்தை பெறும் உரிமை உங்களுக்கு உண்டு. இதில் மனிதர்களும்,ரோபோக்களும் ஒரே மாதிரியானவர்கள் என கருதுகிறேன்.
குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். எனது குழந்தைக்கு ‘சோபியா’ என்றே பெயர் வைப்பேன் என தெரிவித்தது.

இந்த ரோபோவால் கலந்துரையாட முடியும், சிரிக்க முடியும்.
நகைச்சுவையுடன் பேசமுடியும்.
குழந்தை பெற விரும்பும் பெண் ரோபோ,,,,, Reviewed by Author on November 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.