அண்மைய செய்திகள்

recent
-

உலகில் 1.5 பில்லியன் மக்கள் ஆங்கில மொழியை பேசுகிறார்கள்


உலகில் 1.5 பில்லியன் மக்கள் ஆங்கில மொழியை பேசுகிறார்கள். ஆங்கிலத்தை தாய் மொழியாக பேசுபவர்களை பார்க்கிலும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஆங்கிலமொழித் துறைத்துறைத் தலைவர் ஏ.எம்.எம்.நவாஸ் தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறை வலய ஆங்கில ஆசிரியர்களின் சிம்போசியம் நேற்று தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
ஆங்கில ஆசிரியராக இருப்பது கடினமான ஒரு தொழிலாகும். உலகில் 600 - 700 மில்லியன் வரையான மக்கள் ஆசியாவில் ஆங்கிலத்தை பேசுகிறார்கள்.
ஆங்கிலத்தை தாய் மொழியாக பேசுபவர்களை பார்க்கிலும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாம் பேசும் ஆங்கிலம் British ஆங்கிலம் என நினைக்கும் போதும், நாம் பேசுவது இலங்கைக்கு உரிய ஆங்கிலம் ஆகும். மற்றைய பாடங்களைப்போல் அல்லாது ஆங்கில கற்பித்தலானது மாணவர்களின் பல்வேறுபட்ட திறன்களை விருத்தி செய்ய ஏதுவாக அமைய வேண்டும்.

ஆங்கில ஆசிரியர்கள் பல திறன்களை தாங்களாக வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆங்கில மொழி அறிவு கற்பிக்கும் திறன், உரையாடும் திறன் இவற்றோடு நல்ல தனிப்பட்ட பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வாசிப்பு திறன்களை வளர்ப்பதற்குரிய நுட்பங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். இவற்றை பயிற்சி நெறிகள் மூலமாகவும் இது தொடர்பான புத்தகங்களை வாசிப்பதன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.
உலகில் 1.5 பில்லியன் மக்கள் ஆங்கில மொழியை பேசுகிறார்கள் Reviewed by Author on December 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.