அண்மைய செய்திகள்

recent
-

விஸ்வாசம் படத்தின் முதல் அடியை எடுத்து வைத்த சிவா


விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்திற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர் சிவா.


‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். இந்த புதிய படத்திற்கு ‘விஸ்வாசம்’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். அஜித்தின் 58வது படமாக உருவாகும் இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த சில படங்களாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த வந்த அஜித் இந்தப்படத்தில் இளமையான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் அஜித்தை வித்தியாசமான ஸ்டைலில் மாற்றி காண்பிக்க இருக்கிறார் இயக்குனர் சிவா. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்திற்காக அலுவலக பூஜை நேற்று போடப்பட்டுள்ளது. இதில் இயக்குனர் சிவா, எடிட்டர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இப்படத்தில் அஜித்துடன் ‘வீரம்’ படத்தில் நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்த பாலா, ‘விஸ்வாசம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வாசம் படத்தின் முதல் அடியை எடுத்து வைத்த சிவா Reviewed by Author on December 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.