அண்மைய செய்திகள்

recent
-

மனிதர்களின் மூளை இவ்வளவு தகவல்களை சேமிக்குமா? பிரம்மிக்கவைக்கும் ஆய்வு முடிவு -


மனிதர்களின் மூளையில் சுமார் 2.5 petabytes அளவு கொண்ட தகவல்களை எண்ணங்களாக பதிவு செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

உச்சபட்சமாக மனித மூளையில் எவ்வளவு தகவல்களை நாம் சேமிக்க முடியும் என்ற ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் 100 Terabyte அளவுள்ள தகவல்களை நம் மூளை சேமிக்கும் என்று ஆரம்பகட்ட ஆய்வுகளில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தெரிவித்தனர்.
இருப்பினும் இதைவிட அதிகமாக சேமிக்கும் சக்தி நம் மூளைக்கு உள்ளது என்று நம்பிய விஞ்ஞானிகள் ஆய்வை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார்கள். அப்போது சுமார் 2500 டி.பி விடவும் அதிக ஆற்றல் கொண்டது நம் மூளை எனும் அறிவியல் உண்மையை கண்டறிந்தனர்.

அதன்படி பார்த்தால் மனித மூளையில் 342 வருடத்துக்கும் அதிகமான சினிமாவை பதிவு செய்யமுடியும் அல்லது 4800 வருடம் தொடர்ந்து இடைவிடாது கேட்கும் அளவுக்கான பாடல்களையும் கூட நாம் பதிவு செய்ய முடியும் என கூறப்படுகிறது.
எப்படியிருந்தாலும் மனிதர்கள் தற்போது பயன்படுத்தும் மூளையின் ஆற்றலானது அதன் மொத்த ஆற்றலில் கடுகு அளவு மட்டுமே விஞ்ஞானிகள் அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.


மனிதர்களின் மூளை இவ்வளவு தகவல்களை சேமிக்குமா? பிரம்மிக்கவைக்கும் ஆய்வு முடிவு - Reviewed by Author on February 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.