அண்மைய செய்திகள்

recent
-

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல்: எந்த நாடு முதலிடம்? -


ஜெர்மனியைச் சேர்ந்த அரசு சாரா சர்வதேச அமைப்பான ‘Transparency International’ உலகின் ஊழல் மிகுந்த நாடுகளை வரிசைப்படுத்தி, ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.

கடந்த ஆண்டுக்கான (2017) பட்டியலை அந்த அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. 180 நாடுகளில் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 180 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலில், பொதுத்துறையில் ஊழல் அதிகம் நிறைந்த நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ள நியூசிலாந்து, ஊழல் அற்ற நாடாக பார்க்கப்படுகிறது, இதே போல இப்பட்டியலில் முதல் இடம் பிடித்து உலகிலேயே அதிக ஊழல்மிக்க நாடாக சோமாலியா இருப்பது தெரியவந்துள்ளது.

ஊழல் அற்ற சிறந்த நாடுகளாக முதல் இடத்தில் நியூசிலாந்தும், 2வது இடத்தில் டென்மார்க்கும், 3வது இடத்தில் பின்லாந்தும் உள்ளது,
இதே போல, ஊழல் மிகவும் அதிகரித்து காணப்படும் நாடுகளின் வரிசையில் சோமாலியா முதல் இடத்திலும், தெற்கு சூடான் 2வது இடத்திலும், சிரியா 3வது இடத்திலும் உள்ளன.
இந்தப்பட்டியலில் கடந்த 2016ல் 79வது இடம் வகித்த சீனா, 2017க்கான பட்டியலில் 77வது இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் அங்கு ஊழல் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல்: எந்த நாடு முதலிடம்? - Reviewed by Author on February 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.