அண்மைய செய்திகள்

recent
-

எங்களைத் தாக்கியபோது சிரித்திருந்தீர்களே!

அம்பாறையில் நடந்த சம்பவம் பலரையும் கவனத்தில் கொள்ள வைத்துள்ளது.
அம்பாறையில் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் தாக்கப் பட்டதுடன் பள்ளிவாசல் மற்றும் வாகனங்கள் என்பவற்றுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

சிங்களத் தரப்பினர் இத்தாக்குதலைச் செய்ததான குற்றச்சாட்டுக்கள் முஸ்லிம் தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ளதுடன்,

முஸ்லிம் அரசியல் தரப்புகளும் கடும் கண்ட னங்களை வெளியிட்டுள்ளன.
வன்முறைகளும் வன்செயல்களும் எந்த வகையிலும் அனுமதிக்கப்படக்கூடாது என்ப தில் இருவேறு கருத்துக்கிடமில்லை.

அதேவேளை சிங்களத் தரப்புகள் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதனை அனுமதிக்க முடியாது எனவும் சிங்கள மக்கள் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதுதவிர்க்க முடியாதது என்று நினைப்பதும் எந்தவகையிலும் நியாயமாகாது.

வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டபோது தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டியவர்கள் முஸ்லிம் மக்களே! தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எங்கள் முஸ்லிம் சகோதரர்கள் எம் இனத்தின் மீதான அழிப்பு நடவடிக்கைகளைப் பார்த்திருந்தனர்.

விடுதலைப் புலிகள் மீது கொண்ட கோபத்தை தமிழ் மக்கள் மீது வஞ்சிப்பதாக முஸ்லிம் மக்கள் நடந்து கொண்டமை மன்னிக்க முடியாத மாபாவம்.
பரவாயில்லை, தமிழ் மக்களைத்தான் காப் பாற்றவில்லை என்றால், அமைச்சர் ரவூப் ஹக் கீம் அவர்கள் ஜெனிவாவுக்குச் சென்று இலங் கையில் தமிழின அழிப்பு நடக்கவில்லை. இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்படக்கூடாது என வலியுறுத்தினார்.

என்ன செய்வது தமிழ் மக்களை வஞ்சித்து அவர்களைப் பழிதீர்ப்பதில் இத்துணை தூரம் முஸ்லிம் சகோதரர்கள் நடந்திருக்கக்கூடாது.
தவிர, சிறுபான்மைத் தமிழ் மக்களுக்காக சிறுபான்மை முஸ்லிம் மக்கள் குரல் கொடுத்தால்தான் தங்களுக்கும் பெரும்பான்மையிடம் இருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்கள் தடுக்கப் படும் என்ற யதார்த்தத்தைக் கூட முஸ்லிம்மக்கள் உணரத் தவறினர்.
இங்கு நாம் கூறும் கருத்துக்கள் ஒட்டு மொத்த முஸ்லிம் சகோதரர்களையும் குற்றப் படுத்தாது.

மாறாக எத்தனையோ முஸ்லிம் சகோதரர்கள் தமிழ் மக்களுக்காகக் கண்ணீர் விட்டுள்ளனர். பதவி ஆசை கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளே தமிழ் மக்களை வஞ்சிக்கத் தலைப்பட்டனர்.

இதன்விளைவுதான் அம்பாறையில் நடந்த தாக்குதல் சம்பவமாகும்.
எதுஎவ்வாறாயினும் இந்த இடத்தில் நாம் ஒன்றை மட்டும் உறுதியாகக்கூற முடியும். அதாவது, இனிமேல் இலங்கையில் சிங்களத் தரப்பு நடத்தும் வன்முறை என்பது முஸ்லிம் மக்களை நோக்கியதாகவே இருக்கும் என்பதுதான்.
valampuri

எங்களைத் தாக்கியபோது சிரித்திருந்தீர்களே! Reviewed by Author on March 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.