அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானிய அரச குடும்ப திருமணம்: செலவு செய்வது யார் தெரியுமா?


கோலாகலமாக நடந்து முடிந்த இளவரசர் ஹரி மற்றும் மேகன் திருமணத்திற்கு யார் செலவு செய்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா தலைநகர் லண்டனுக்கு அருகேயுள்ள வின்ஸ்டர் அரண்மனை வளாகத்தில் தான் இளவரசர் ஹரி மற்றும் மேகனின் திருமணம் நடைபெற்றது.

இதை பார்ப்பதற்காக சுமார் 1.2 லட்சம் பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். திருமணத்தில் பங்கேற்பதற்கான அழைப்பிதழ்கள் 600 விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில்,
மாலையில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு இன்னும் கூடுதலாக 200 விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், அரச குடும்ப அரண்மனையிலுள்ள மைதானத்தில் அமர்ந்து பொதுமக்கள் 1200 பேர் திருமணத்தை கண்டுகளித்துள்ளனர்.

மிக ஆடம்பரமாக நடத்தப்பட்ட இந்த திருமணத்திற்கு பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்தே மொத்த செலவும் செய்யப்படுகிறது.
வில்லியம் கேட் திருமண விழா பாதுகாப்பிற்கு மட்டும் பெருநகர காவல்துறை சுமார் 6.35 மில்லியன் பவுண்ட்ஸ் செலவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்ற போதும், ஹரி மற்றும் மெர்க்கல் திருமண செலவு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாது என்றே ஆர்வலர்கள் நம்புகின்றனர்.

தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலில், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் சேர்ந்து 32 மில்லியன் பவுண்டுகள் இருக்குமென்று கூறுகிறது.
கேக்குகளுக்கு 50,000 பவுண்டுகள், மலர் அலங்காரத்துக்கு 110,000 பவுண்டுகள் மற்றும் உணவு ஏற்பாடுகளுக்கு 286,000 செலவாகுமென்று அந்த தனியார் நிறுவன இணையதளம் கூறுகிறது.
திருமணத்திற்கான பாதுகாப்பு செலவை வரி செலுத்தும் பொதுமக்கள் மூலம் ஈடுகட்டப்படும்.
மட்டுமின்றி பாதுகாப்பை தவிர்த்து மற்ற விடயங்களுக்கான செலவினங்களை தாங்களே செலுத்துவோம் என்று அரச குடும்பத்தினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




பிரித்தானிய அரச குடும்ப திருமணம்: செலவு செய்வது யார் தெரியுமா? Reviewed by Author on May 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.