அண்மைய செய்திகள்

recent
-

ஞாபகத்திறனை குறைத்து கொள்கிறதா மனித மெமரி சிப்ஸ்? -


வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் பல்வேறு பழைய விடயங்கள் மறைந்து வருகின்றன. அது போலவே நமது ஞாபகத்திறனையும் நாம் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம் என்பதும் உண்மை.

நமது கைபேசியின் உதவி இல்லாமல் நம்மால் நமக்கு நெருக்கமானவர்களின் தொலைபேசி எண்களை கூற முடியுமா என்றால் அதிகம் அழைக்கப்படும் நபர்களின் எண்களை கூட சொல்ல திணறுவது உண்மைதானே.
இதில் நமது பெற்றோர், துணையின் எண்களும் கூட சில சமயங்களில் நமது ஞாபகத்தில் இருப்பதே இல்லை.

முன்பெல்லாம் விரல்நுனியில் விஷயங்கள் வைத்திருப்பவர்கள் எல்லோரும் ஜீனியஸ் என்று செல்லமாக அழைக்கப்பட்டனர்.ஆனால் இப்போதோ தொடு திரையை தடவி தடவி நமது விரல் நுனிகள் தேய்வது மட்டுமே நமக்கு மிச்சமாகிறது,
நமது வாழ்வின் மிக முக்கிய நாட்களை எளிதாக போடக் கூடிய சிறு சிறு கணக்குகளை நாம் அத்யாவசியாமாக செய்தாக வேண்டிய செயல்களை கூட நாம் சுலபமாக மறக்கிறோம். அவற்றை நமது கைகளில் உள்ள சின்னஞ்சிறிய செவ்வக பெட்டியில் தேடுகிறோம்.

இந்த வகையான தொழில்நுட்பத்தை சார்ந்திருக்கும் நமது ஞாபகத்தை முதுமையில் நாம் நினைவுத்திறனை இழக்கும் நோயான டிமென்ஷியாவுடன் ஒப்பிடுகின்றார் ஜெர்மானிய மருத்துவர் மானபிரேட் பிரெட்ஜர்.

முதுமையில் மூளை நரம்பு தேய்மானத்தால் ஏற்படும் ஞாபகமறதி போன்றதுதான் ஸ்மார்ட்போன்களில் தங்களது ஞாபக திறனை அடமானம் வைத்திருக்கும் இளைஞர்களின் மறதியும் என்கிறார் இவர். மேலும் இணையதளத்திலேயே எப்போதும் இருப்பதால் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் , ஞாபகசக்தி குறைவுள்ளவர்களாகவும் இருப்பதாக ஆய்வு கட்டுரை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
இதற்கு டிஜிட்டல் டிமென்ஷியா என்று பெயர் வைத்துள்ளார். இதனால் சர்ச்சைகள் எழுந்தாலும் இந்த ஆய்வு கட்டுரையில் சுட்டி கட்டப்பட்டுள்ள அபாயத்தை யாரும் மறுப்பதற்கில்லை.

ஸ்மார்ட்போன்களில் உதவியால் நமது தேடுதல் நரம்புகளின் திறன் மேம்படலாமே தவிர நினைவாற்றல் திறன் கண்டிப்பாக பாதிக்கப்படுகிறது. எது எளிதானதோ அதனை பயன்படுத்தவே மனம் விரும்புகிறது. ஆகவே இதனை உணர்ந்து கவனமாக நாம் நமது செயல்களை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் என்கிறது இந்த ஆய்வு கட்டுரை.
இந்த வகை ஸ்மார்ட்போன்களால் அதிகம் அபாயங்களை சந்திப்பது சிரியவர்கள்தான் என்கிறது இந்த ஆய்வு. மூளை திறன் மேம்பாட்டு வளர்ச்சியடைய வேண்டிய பருவத்தில் இவர்கள் கையில் செல்போன்கள் இருப்பதால் இவர்களது மூளைத்திறன் சர்வ நிச்சயமாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இவர்களின் எதிர்காலம் என்பது மின்னணு கருவிகளின் உதவி இல்லாமல் நிகழவே நிகழாது என்பது போன்றதொரு மாயைக்கு இவர்கள் தள்ளப்படுவார்கள்.

இதன் அபாயங்களை ஒரு சில நாடுகள் அறிந்து வந்ததால் இளம்படுவது சிறார்களுக்கு பள்ளிமுதல் இந்த பழக்கங்கள் தவிர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு சில நாடுகள் இதனை பெரிதாக அலட்டிக்கொள்வதே இல்லை.
அதிக நவீன மய உணவுகள் உடலை பாதித்த போது பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் தந்து உணவு பழக்கத்தில் ஒரு புரட்சி ஏற்பட்டதை போல இந்த மின்னணு கருவிகள் இல்லாமல் இருக்கவும் குழந்தைகளுக்கு கற்று தர வேண்டியது அவசியமாகிறது.

இல்லாவிட்டால் ஒரு நாள் இந்த மின்னணு கருவிகள் இல்லாவிட்டால் சுயமாக எதுவும் செய்ய முடியாத ஸ்மார்ட் போன் இல்லாத மாற்று திறனாளியாக நமது குழந்தைகள் மாறிவிடும் அபாயம் இருக்கிறது.
ஆகவே ஸ்மார்ட் போன்கள் நம்மை ஸ்மார்ட் ஆக்கத்தானே தவிர நமது மூளையின் திறனை மழுங்க செய்ய அல்ல என்பதை உணர்ந்து செயல்படுவது அனைவர்க்கும் நல்லது.

ஞாபகத்திறனை குறைத்து கொள்கிறதா மனித மெமரி சிப்ஸ்? - Reviewed by Author on July 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.