அண்மைய செய்திகள்

recent
-

தனுஸ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கரை ஒதுங்கிய அரியவகை டொல்பின்:-படம்

தனுஸ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இறந்த நிலையில் இன்று (11)கரை ஒதுங்கிய  இராட்சத  டொல்பினை அதிகாரிகள் உடல் கூற்று பரிசோதனை செய்த நிலையில்  புதைத்துள்ளனர்.

தனுஷ்கோடி அருகே முகுந்த ராயர் சத்திரம்  கடல் பகுதியில்  அரியவகை கூன் முதுகு ஓன்கி  இனத்தைச் சேர்ந்த  டொல்பின் மீன் ஒன்று  கண் பகுதியில் காயம் அடைந்து இறந்த நிலையில் இன்று (11) கரை ஒதுங்கியுள்ளது.

இதனையடுத்து அப்பகுதி மீனவர்கள் வனத்துறை  அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

 இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கரை ஒதுங்கிய டொல்பினை கால் நடை மருத்துவர் மூலம் உடற்கூற்று பரிசோதனை செய்த பின் மணலில் புதைத்தனர்.

 இவை பெரும்பாலும் ஆழ் கடலில் வசிப்பவை.

  விசைப்படகுகள் மற்றும் பெரிய கப்பல்களில் அடிப்பட்டு இறந்திருக்கலாம் அல்லது கடலில் வீசி எரியப்படும், பிலாஸ்டிக் வலைகளை சாப்பிட்டு இறந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிஎன்றது.


எனினும்  உடல் கூற்று ஆய்வில்  முடிவில் குறித்த டொல்பின்  மீனின் இறப்பு குறித்து தெரிய வரும்.

மேலும்  இது குறித்து மண்டபம்  வனத்துறை அதிகாரி  சதீஸ் கூறுகையில்,,,,

 கரை ஒதுங்கிய டொல்பின் கூன் முதுகு ஓன்கி என்ற இனத்தை சேர்ந்த பெண் டொல்பின்.

  சுமார் 50 கிலோ   எடையும் 5 அடி நீளம் கொன்ட சுமார்  9 வயதுடையது எனவும் இது அரியவகை இனத்தை சேர்ந்தது.

இந்த டொல்பின் மீனின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

மேலும் இது போன்ற அரிய வகை உயிரினங்களை வேட்டையாடினால் மூன்று வருடங்க முதல் ஏழு வருடங்கள் வரை  சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என  தெரிவித்தார் .
-மன்னார் நிருபர்-




தனுஸ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கரை ஒதுங்கிய அரியவகை டொல்பின்:-படம் Reviewed by Author on July 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.