அண்மைய செய்திகள்

recent
-

பிரான்சில் சைவ உணவு உண்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் -


பிரான்சில் அரசு சாரா அமைப்பு ஒன்று சைவ உணவு வகைகளில் அசைவ உட்பொருட்கள் சேர்க்கப்படுவதாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று சைவம் உண்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12 சைவ உணவுகளில் விலங்குகள் மற்றும் பூச்சிகளில் இருந்து எடுக்கப்படும் உட்பொருட்கள் சேர்க்கப்படுவதாக பிரான்சின் அரசு சாரா நுகர்வோர் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

யோகர்ட்டில் ஜெலாட்டினும், குளிர்பானங்கள் சிலவற்றில் cochineal என்னும் பொருளும் சேர்க்கப்படுகின்றனவாம்.

ஒரு படி மேலே போய் சில தயாரிப்புகளில், அவற்றில் அசைவ உட்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன என்பதை லேபிலில் கூட அச்சிடுவதில்லை என்றும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
அப்படி சேர்க்கப்படும் பொருட்களில் பன்றி அல்லது மாட்டிலிருந்து எடுக்கப்படும் ஜெலாட்டின், பூச்சிகளிலிருந்து கிடைக்கும் ரெசின், வண்டுகளிலிருந்து எடுக்கப்படும் cochineal ஆகியவை அடங்கும்.
இவ்வாறு அசைவ உட்பொருட்கள் சேர்க்கப்படும் தயாரிப்புகள் என பட்டியலிடப்படும் பொருட்களில் ஒயின், யோகர்ட், திராமிசு, ஐஸ் கிரீம், இனிப்பு வகைகள், டின்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள், பாலாடைக்கட்டி, சில குளிர்பானங்கள், ஆப்பிள்கள் மற்றும் புகழ் பெற்ற நிறுவனங்களான Yoplait, Nestle, Fuji மற்றும் Haribo ஆகிய பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளும் அடங்கும்.

அதே நேரத்தில் Nestle Viennoisஇன் சாக்லேட் யோகர்ட்டில், பன்றியிலிருந்து எடுக்கப்படும் ஜெலாட்டின் சேர்க்கப்படுவதாகவும், Cassegrain தயாரிப்பான பீன்ஸ்
ஒன்றுடன் சிக்கன் ஸ்டாக் சேர்க்கப்படுவதாகவும் (குறைந்தபட்சம் பாக்கெட்டின் பின்பக்கத்திலாவது) குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்சில் சைவ உணவு உண்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் - Reviewed by Author on September 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.