அண்மைய செய்திகள்

recent
-

36000 பேரை கொடூரமாக கொலை செய்த நாஜி படை காவலர் -


ஆஸ்திரியா முகாமில் அடைக்கப்பட்டிருந்த 36 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகளை, 95 வயதான முன்னாள் நாஜி காவலர் கொடூரமாக கொலை செய்ததாக பெர்லினின் வழக்கறிஞர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
1944 ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து 1945 ஆம் ஆண்டுவரை வடக்கு ஆஸ்திரியாவில் உள்ள மிகப்பெரும் முகாமில், முன்னாள் நாஜி காவலர் 36,223 கைதிகளை கொடூரமாக கொலை செய்ததாக பெர்லின் வழக்கறிஞர் அலுவலகம் கூறியுள்ளது.

தற்போது 95 வயதை அடைந்திருக்கும் ஹான்ஸ் வெர்னெர் எச், லின்ஸில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்திருந்த மிகப்பெரிய Mauthausen கைதிகள் முகாமில் காவலராக இருந்து வந்துள்ளார். இங்கு 14,000 யூதர்கள் உட்பட, சுமார் 95,000 பேர் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர்.
முகாமில் இருந்த மக்களை பல்வேறு சோதனைக்கு உட்படுத்துதல்,, விஷ வாயுவை பயன்படுத்துதல், துப்பாக்கியால் சுடுதல், பட்டினி போடுதல் உள்ளிட்ட துன்புறுத்தல்களால் கொலை செய்துள்ளார் என வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்திய ஆண்டுகளில் ஜேர்மனியின் புதிய சட்டபடி, நாஜி முகாம்களில் கைதிகளை கொலை செய்த காவலர்களுக்கு போதிய ஆதாரம் இல்லாவிட்டாலும் கூட அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் நாஜி காவலர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் வயது முதிர்ச்சியின் காரணமாக அதற்கு முன்னதாகவே இறந்துவிட்டார்.


36000 பேரை கொடூரமாக கொலை செய்த நாஜி படை காவலர் - Reviewed by Author on November 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.