அண்மைய செய்திகள்

recent
-

லொட்டரியில் 200,000 பவுண்டுகள் அள்ளிய பிரித்தானியார்:


பிரித்தானியர் ஒருவர் லொட்டரியில் வென்ற 200,000 பவுண்டுகள் தொகையை அளிக்க குறித்த லொட்டரி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் அவரை கொந்தளிக்க வைத்துள்ளது.

பிரித்தானியரான 56 வயது எரிக் வாக்கர் என்பவர் 3 பவுண்டுகளுக்கான லொட்டரி ஒன்றை வாங்கியுள்ளார்.
குறித்த லொட்டரியில் 200,000 பவுண்டுகள் பரிசையும் வென்றுள்ளார் நான்கு குழந்தைகளின் தந்தையான எரிக் வாக்கர்.
ஆனால் அந்த தொகையை வழங்க லொட்டரி நிறுவனம் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது.
லொட்டரியில் வெற்றி எண்களை எரிக் வாக்கர் திருட்டுத்தனமாக திருத்தியதாகவும், அதனால் தொகையை வழங்க முடியாது எனவும் வாதிட்டுள்ளனர்.

வேறு தொழில் ஏதும் இல்லாமல் பரிதவித்துவரும் எரிக் வாக்கர், இது தமது குற்றமல்ல எனவும், தவறுதலாக அச்சிடப்பட்டிருக்கலாம் எனவும் வாதிட்டுள்ளார்.
ஆனால் அதை ஒப்புக்கொள்ள குறித்த நிறுவனம் மறுத்துள்ளது. இந்த விவகாரத்தை இப்படியே விட்டுவிட முடியாது என கூறியுள்ள எரிக், தங்களுக்கு கிடைக்க வேண்டிய 200,000 பவுண்டுகள் தொகையை லொட்டரி நிறுவனம் ஏமாற்ற வழி பார்க்கிறது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த லொட்டரி பணம் தங்களது வாழ்க்கையை மற்றவல்லது எனவும், லொட்டரியில் வெற்றிபெற்றும் தங்களை ஏமாற்றும் செயல் இது எனவும் எரிக் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய லொட்டரி நிறுவன முகவர், எரிக் வெற்றி பெற்றது சந்தேகமாக உள்ளது.
ஒரு எழுத்தை அவர் திருட்டுத்தனமாக வெற்றி எழுத்தாக மாற்றியுள்ளார். நாங்கள் இந்த விவகாரத்தை பொலிசாருக்கு புகார் தெரிவிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

லொட்டரியில் 200,000 பவுண்டுகள் அள்ளிய பிரித்தானியார்: Reviewed by Author on December 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.