அண்மைய செய்திகள்

recent
-

பெண்கள்,சிறுவர்கள் உட்பட 72 இலங்கையர்களுடன் பிரான்ஸ் தீவை சென்றடைந்த கப்பல்!


பெருமளவு இலங்கையர்களை ஏற்றிய கப்பல் ஒன்று பிரான்ஸிற்கு சொந்தமான தீவான ரீயூனியனை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெண்கள், சிறுவர்கள் உட்பட 72 இலங்கையர்கள் இந்த கப்பலில் பயணிப்பதாக தெரியவந்துள்ளது.

குறித்த கப்பல் நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து பிரான்ஸ் தீவை நோக்கி பயணித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பல், 25 நாட்களுக்குள் ரீயூனியன் தீவை நெருங்கியுள்ளது. சிலாபம் மீன் வர்த்தகரான சுதர்ஷன் பெரேரா என்பவருக்கு சொந்தமான கப்பலை மஹவெவ பிரதேசத்தை சேர்ந்த பெர்னாண்டோ என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்த கப்பலை ஓட்டியவர் ஆட்கடத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக கப்பல் உரிமையாளர் நீர்கொழும்பு பொலிஸ் மற்றும் குற்ற விசாரணை திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த மாதம் 9ஆம் திகதி கப்பல் உரிமையாளர் தேவையான உணவு மற்றும் ஐஸ் ஆகியவற்றை வழங்கி மீன் பிடிக்க அனுப்பியுள்ளார். இதன் பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கப்பலில் பயணித்தவர்களிடம் 6 முதல் 8 லட்சம் ரூபாய் வரை பணம் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பெண்கள்,சிறுவர்கள் உட்பட 72 இலங்கையர்களுடன் பிரான்ஸ் தீவை சென்றடைந்த கப்பல்! Reviewed by Author on February 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.