அண்மைய செய்திகள்

recent
-

இந்திய இலுவைப்படகுகள் மீண்டும் மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறல்- மன்னார் மீனவர்களுக்கு பெரும் பாதிப்பு. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்திடம் புகார்

மன்னார் கடல் பரப்புக்குள் மீண்டும் இந்திய இலுவைப் படகுகளின்
அத்துமீறலால் மன்னார் மீனவர்கள் மீண்டும் பெரும் பாதிப்புக்குள்ளாகி
வருவதாக மீனவர்கள் கவலை அடைவதுடன் இது விடயமாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளனர்.

திங்கள் கிழமை (11.02.2019) இரவு மன்னார் மாவட்டத்திலுள்ள பேசாலைப் பகுதி
மீனவர்கள் இரவு நேரத்தில் கடற்தொழிலுக்குச் சென்ற வேளையில் 500 மேற்பட்ட இந்திய இலுவைப்படகுகள் அத்துமீறி மன்னார் கடற்கரையை அண்டி மீன்பிடியில் ஈடுபட்டதால் பதினொரு பேசாலை மீனவர்களின் படகுகளுக்கான மீன்பிடி வலைகள் நாசமாகியுள்ளதாக பாதிப்படைந்த மீனவர்கள் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் கவனத்து கொண்டு வந்துள்ளனர்.

ஒவ்வொரு மீனவ படகுகளுக்கும் சுமார் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் நாசமாகியுள்ளதாகவும் இவர்கள் புகாரிட்டுள்ளனர்.

கடந்த சில காலமாக இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி
நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்த சமயத்தில் இலங்கை கடற்படையினர்
இவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும்,

ஆனால் அன்மையில் 51 தினங்கள் இலங்கை அரசாங்கத்தின் ஆட்சியில் நிலவிய ஸ்திரத்தன்மைக்குப்பின்னும் அத்துடன் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து சட்ட ரீதியாக தடுத்து வைக்க்பட்டிருந்த இந்திய இலுவைப்படகுகள் தற்பொழுது இலங்கை இந்திய அரசின் பேச்சுவார்த்தைக்குப் பின் அவைகள் விடுவிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்தே மீண்டும் இந்திய இலுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்வதாக பாதிப்புக்குள்ளாகி வரும் மீனவர்கள் மன்னார் மீனவ சமாஐத்தினூடாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தள்ளனர்.

கடலில் இலங்கை கடற்படையினர் ரோந்தில் ஈடுபட்டு வருகின்றபோதும் இலங்கை கடற்படையினர் இந்திய இலுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டும் காணாது இருப்பதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்திய இலுவைப்படகுகள் மீண்டும் மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறல்- மன்னார் மீனவர்களுக்கு பெரும் பாதிப்பு. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்திடம் புகார் Reviewed by Author on February 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.