அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையின் முதல் தமிழ் பௌத்த துறவி -மனிதன் மனிதனாக, மனித நேயத்துடன் வாழவேண்டும்:


மனிதன் மனிதனாக, மனித நேயத்துடன் வாழவேண்டும் என்ற முன்னோர்களினது வார்த்தைகள், சைவ சமயத்தில் உண்டு எனவும் சமயத்தை படிப்பதில் மாத்திரமின்றி அதனைச் செயலில் செயற்படுத்த வேண்டும் எனவும் இலங்கையின் முதல் தமிழ் பௌத்த துறவியான பொகவந்தலாவ ராகுல ஹிமி தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - மயிலம்பாவெளி, கருணை இல்லத்தில் சைவசமயம் தொடர்பாகவும், தலைமைத்துவம் தொடர்பாகவும் ஒரு நாள் கருத்தரங்கு இன்று உலக சைவ திருச்சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கையிலே முதல் தமிழ் பௌத்த துறவி பொகவந்தலாவ ராகுல ஹிமி தேரர் ஆகிய நான்தான். எனது நோக்கம், தமிழர்களா, சிங்களவர்களா, முஸ்லிம்காளா, கிறிஸ்த்தவர்களா என்பதைவிட அனைவரும் மனிதர்கள் என்பது தான். பௌத்த சமயம் சைவ சமயத்திலிருந்து வந்தது. புத்த பெருமானின் பிறப்பு சைவ சமயமாகும்.

அவர் இந்தியாவிலே பிறந்து 29 வயது வரை சிவனை வழிபட்டு, 29 வயதிலே அவர் அரண்மனையை விட்டு வெளியேறி, அன்று இந்தியாவிலே அரச மரத்தடியில் பிள்ளையாரை வைத்து வழிபட்டு, தியானம் செய்து வந்தார். பின்னர் மக்கள் கையெடுத்துக் கும்பிடுவது அரசமரமாக இருந்தது. பின்னர் அவர் அந்த மரத்தடியிலே அமர்ந்து 6 வருடங்கள் தியானம் செய்து, ஞானம் பெற்றார்.

முதலாவதாக அவர் வழங்கிய போதனை இந்தியாவிலே வாழ்ந்த சைவர்களுக்காக வழங்கப்பட்ட போதனையாகும். அன்று உலகத்தில் புத்த மதம் இருக்கவில்லை, சிவனுக்கு பூஜை செய்த 5 போர் புத்த பெருமானிடம் போதனையை பெற்ற பின்னர்தான் அவர்கள் துறவறம் செய்துள்ளார்கள். எனவே சைவ சமயமும், பௌத்த சமயமும் அண்ணன் தம்பி மாதிரி. எனது நோக்கமும் இது இரண்டையும் இணைப்பதுதான்.
மாதா, பிதா, குரு, தெய்வம், நான்காவதாகத் தான் இறைவனை வணங்குமாறு சைவ சமயம் குறிப்பிட்டுள்ளது. பாடசாலையில் சைவ சமயத்தை அங்குள்ள புத்தகங்களைக் கொண்டு கற்பிக்கின்றார்கள், ஆனால் அறநெறிப் படசாலைகளில் கற்பிப்பதற்கு இதுவரையில் சைவ சமயப் புத்தகம் இன்னும் வெளியிடவில்லை.

பாடசாலையிலே கற்பிக்கும் புத்தகத்தை அறநெறியில் கற்பிக்க முடியாது. ஏனெனில் அறநெறிக்கு வேறாக புத்தகம் தயாரிக்க வேண்டும். அறநெறி என்பது எமது பழக்க வழக்கங்கள்.
எனவே அனைத்து பாடசாலைகளுக்கும், அறநெறிப் பாடசாலைகளுக்கும் நாங்கள் வரவேண்டும், அங்கு வந்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நாங்கள் ஆன்மீகப் போதனைகளை வழங்க வேண்டும்.

அனைவரினதும் விரும்பம் இவ்வுலகில் நல்லகாரியங்கள் செய்து இறுதியில் வைகுண்டம் (சுவர்க்கம்) போய் சேரவேண்டும் என்பதுதான். இதற்காக நாம் இவ்வுலகில் புண்ணியங்கள் அதிகம் செய்ய வேண்டும். அம்மாவிடம் நாம்போய் கேட்பது நீர் எனக்கு என்ன செய்தாய் என்று அந்த ஒரு கேள்வியே போதும் நரகத்திற்குப் போய்ச் சேர்வதற்கு. 24 மணிநேரமும் தாயின் வயிற்றிலே உள்ள குழந்தையைப் பற்றித்தான் தாயும், தந்தையும் சிந்திக்கின்றார்கள்.

ஆனால் என்னைப் பெற்றபோது மறு பிறவி எடுத்த எனது தாய்க்கு இன்னுமொரு வேதனையை கொடுத்துவிடாதே என நாம் யாரும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யவிலலை. தாயின் உடம்பில் காயம் வந்தால் இரத்தம் வருகின்றது. ஆனால், பால் வெள்ளையாக வருகின்றதே இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்கின்றது என்பதை யாரும் சிந்தித்ததில்லை என அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முதல் தமிழ் பௌத்த துறவி -மனிதன் மனிதனாக, மனித நேயத்துடன் வாழவேண்டும்: Reviewed by Author on February 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.