அண்மைய செய்திகள்

recent
-

ஐ.நா தீர்மானம் குறித்து அமெரிக்காவிடம் ஆதங்கப்பட்ட சிறீதரன்! -


தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஐ.நா தீர்மானத்தின் மூலம் நீதி கிடைக்குமா? அல்லது இப்படியே ஏமாற்றப்பட்டு எமது மக்களுக்கு நீதி கிடைக்காமல் போகுமா? எமது மக்களுக்கான முடிவுதான் என்ன என அமெரிக்க உயர்ஸ்தானிகரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆதங்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் இம்முறை இலங்கை தொடர்பான ஐ.நா தீர்மானம் கொண்டுவரப்படவுள்ள நிலையில், இது தொடர்பில் பல தரப்பினராலும் பல்வேறுபட்ட சர்ச்சைகளடங்கிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க உயர்ஸ்தானிக்கரான அலைனா ஸ்ரெபீஸ் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை தொடர்பான ஐ.நா சபையின் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களும் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கக் கூடாது என்கிறார்கள்.
அதேபோல புலம் பெயர் தேசத்திலுள்ள அமைப்புக்களும் கால அவகாசம் வழங்கக் கூடாது என்கிறார்கள்.
இதே நேரம் இலங்கையின் ஜனாதிபதியும் ஐ.நா சபையால் இலங்கைக்குக் கால அவகாசம் என்பது வழங்கப்படத் தேவையில்லை இதனை இவ்வாறே விட்டு விடுங்கள் எனக் கூறுகின்றார்.

இந்நிலையில் இதன் தார்ப்பரியம் என்ன? இது என்னவாக நடக்கும்? நாம் ஏமாற்றப்பட்டு விட்டோமா? ஐ.நாவாலும் எமக்கு நீதி கிடைக்காதா? என அமெரிக்க உயர்ஸ்தானிகரிடம் நாம் எமது தரப்புக் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தோம்.

அதற்கு அவர், தாங்கள் இலங்கை தொடர்பில் எடுத்துள்ள தீர்மானங்களிலிருந்து விலகவில்லை எனவும், தாங்கள் அதனை கைவிட்டு விடாத வகையில் முன்னெடுத்துச் செல்வோம் எனவும், இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு என்ற வகையில் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது என்பது தொடர்பில் நாம் செயற்பட்டு வருகின்றோம்.


இலங்கையுடன் சேர்ந்து சில விடயங்களைக் கையாள்வதா? அல்லது எதிர்த்து நின்று முன்னெடுப்பதா அப்படி நாம் எதிர்த்தால் இலங்கையுடன் அவர்களுக்கு ஆதரவாக யார் யார் கூட்டுச் சேர்வார்கள் என்பது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தியே எமது முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஆனாலும் நாம் இவ்விடயத்தைக் கைவிடவில்லை. இம்மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை அமெரிக்கா அவர்களுக்காகச் செயற்படும் என அமெரிக்க தூதுவர் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.


ஐ.நா தீர்மானம் குறித்து அமெரிக்காவிடம் ஆதங்கப்பட்ட சிறீதரன்! - Reviewed by Author on March 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.