அண்மைய செய்திகள்

recent
-

உலகிலேயே முதன் முறையாக லண்டன் நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டம்! -


காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், உலகிலேயே முதன்முறையாக லண்டன் நகரில் வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் மாசுக் கட்டுப்பாட்டு மண்டலம் செயல்படுத்தப்படுகிறது.

வாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் காற்று மாசினை குறைக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும் காற்றில் மாசு பரவுவதை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் காற்றின் மாசு அளவினை கண்டறியும் தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்பட்ட சோதனையில், பெருகிவரும் வாகனங்கள் மற்றும் பழைய வாகனங்களின் புகைகளால் அதிக அளவில் மாசுபடுவதாக கண்டறியப்பட்டது.

இதையடுத்து நகரத்தின் உள்ளே இயக்கப்படும் வாகனங்களின் புகை வெளியிடும் அளவில், பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்கள் யூரோ 4 தர நிலையிலும், டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் யூரோ 6 தர நிலையிலும் இருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் அன்றாடம் அபராதம் விதிக்கப்படும் எனவும் லண்டன் மேயர் சாதிக் கான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பெட்ரோல் மூலம் இயங்கும் இருசக்கர வாகனங்கள் நாள் ஒன்றுக்கு 12.50 பவுண்ட் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் பாரவூர்தி, பேருந்து போன்றவை 100 பவுண்ட் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகன சாரதிகள் வண்டியின் புகை தரநிலைகளை, லண்டன் போக்குவரத்துத்துறை செயல்படுத்தும் இணையகருவி மூலம் சோதனை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றில் கொடிய நைட்ரஜன் ஒக்ஸைட் கலக்க அதிக அளவில் வாகனங்களின் புகையே காரணமாகும் எனவும் இதனால் ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்கள் மக்களை எளிமையாக தாக்குகின்றன எனவும் இதனை தடுக்கவே வாரத்தின் 7 நாட்களிலும், 24 மணிநேரமும் மாசு கட்டுப்பாட்டு மண்டலம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே முதன் முறையாக லண்டன் நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டம்! - Reviewed by Author on April 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.