அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் எதிர்காலத்தில் புலவு நெற்செய்கை செய்யும் எண்ணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்.மன்னார் அரசு அதிபர் சீ.மோகன்ராஸ்.

நாம் மன்னார் மாவட்டத்தில் ஒரு உச்ச விவசாய நெற் செய்கையை பெற
வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றுபட்டு  இவ் கூட்டத்தில் எடுக்கும்
தீர்மானத்திலே தங்கியுள்ளது. ஏனென்றால் மன்னாரில் சிறுபோகம் விவசாயம் என்றால் பிரச்சனை ஒன்றாகவே காணப்படுவதால் ஒவ்வொரு அமைப்புக்கலிலிருந்தும் பிரதிநிதியாக வந்திருக்கும் நீங்கள் நல்ல தலைமைத்துவ பண்பாட்டுடன் செயல்பட வேண்டும். எதிர்வரும் காலத்தில் மன்னாரில் புலவு நெற்செய்கை செய்ய வேண்டும் என்ற சிந்தனையை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.மோகன்ராஸ் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக் கிழமை (03.05.2019) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்
சீ.மோகன்ராஸ் தலைமையில் முருங்கன் கட்டுக்கரைக்குள திட்ட முகாமைத்துவ கேட்போர் கூடத்தில் கட்டுக்கரைக் குளத்தின் கீழு; சிறுபோக பயிர் செய்கை விடயமான கூட்டம் நடைபெற்றது.

கட்டுக்கரைக்குளத்தின் கீழ் விவசாயம் செய்யும் 83 விவசாய அமைப்பக்களின்
விவசாய பிரதிநிதிகள் இவ் கூட்த்தில் கலந்த கொண்டனர். இவர்கள் மத்தியில்
மன்னார் அரசாங்க அதிபர் சீ.மோகன்ராஸ் தொடர்ந்த பேசுகையில்

நாம் மன்னார் மாவட்டத்தில் ஒரு உச்ச விவசாய நெற் செய்கையை பெற
வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றுபட்டு  இவ் கூட்டத்தில் எடுக்கும்
தீர்மானத்திலே தங்கியுள்ளது. ஏனென்றால் மன்னாரில் சிறுபோகம் விவசாயம் என்றால் பிரச்சனை கொண்ட கூட்டமாகவே காணப்படுவதால் ஒவ்வொரு அமைப்புக்கலிலிருந்தும் பிரதிநிதியாக வந்திருக்கும் நீங்கள் நல்ல
தலைமைத்துவ பண்பாட்டுடன் செயல்பட வேண்டும்

அதைவிடுத்து ஒரு கூட்டத்தில் ஒரு விடயத்தை பேசும்போது ஆளுக்காள்
முரண்பட்டுக்கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ளாமல் தேனீரை அருந்திவிட்டு வெளியில் எழுந்து போவதால் எந்த பயணும் அமைய போவதில்லை. ஆகவே பல அமைப்புக்ளிலிருந்து நீங்கள் அப் பகுதி விவசாயிகள் சார்பாக வந்திருக்கின்றீர்கள.; நாம் மேற்கொள்ள இருக்கும் நெற்செய்கை சம்பந்தமாக நல்ல தீர்மானத்தை மேற்கொண்டு மன்னாரில் நல்ல விளைச்சலை பெறக்கூடிய செயல்பாடாக இவ் கூட்டம் அமைய வேண்டும்.

மன்னாரில் இந்த புலவு விவசாயம் செய்வதால் ஏற்படும் நன்மை தீமை என்ன
என்பதையும் நாம் சற்று சிந்திக்க வேண்டும். நான் அரசாங்க அதிபராக
பொறுப்பேற்றபின் கண்டு கொண்ட விடயம் என்னவென்றால் இந்த காலத்தில் குளத்தை அண்டிய பகுதியில் புலவுப் பகுதியில் சிறுபோகம்  செய்ய வேண்டும் என அடம்பிடிப்பர்.

காலபோக விவசாய நெற்செய்கை காலத்தில் புலவில் விவசாயம் செய்யக்கூடாது ன்பர். இந்த புலவு விவசாயம் செய்வதால் குளக்கட்டுக்களுக்கே ஆபத்து இருப்பதை நாம் உணர்வதில்லை.
எமது முன்னோர் இயந்திரங்கள் அற்ற காலத்தில் தங்கள் கரத்தால் மண்வெட்டி பிடித்து தூரநோக்கோடு கட்டப்பட்ட குளங்கள்தான் இவ் குளங்கள். ஆனால் நாம் இப்பொழது புலவு விவசாயம் எனக்கூறிக் கொண்டு குள அணைக்கட்டுக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு
வருகின்றோம்.
எதிர்வரும் காலத்தில் மன்னாரில் புலவு நெற்செய்கை செய்ய வேண்டும் என்ற சிந்தனையை தவிர்த்து இங்குள்ள ஊட்டக் குளங்களில் நீரை சேகரித்து வைத்து அவற்றைக் கொண்டு வழமையான காலபோக விவசாயம் போன்று விவசாயத்தை மேற்கொள்வது நலம் என்றார்.

மன்னாரில் எதிர்காலத்தில் புலவு நெற்செய்கை செய்யும் எண்ணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்.மன்னார் அரசு அதிபர் சீ.மோகன்ராஸ். Reviewed by Author on May 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.