அண்மைய செய்திகள்

recent
-

யாழ் பல்கலைக்கழக ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் கைது கண்டனத்திற்குரியது-வி.எஸ்.சிவகரன்

யுத்த காலத்தைக்போல் ஒரு அச்ச நிலையும்,பயந்த பீதியையும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்துகின்ற நிலையில் இராணுவம் ஆங்காங்கே சோதனைகளையும் விசாரனைகளையும், கைதுகளையும் காரணம் இன்றி மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த விடையங்களில் சம்மந்தம் இல்லாத அப்பாவி இஸ்ஸாமியர்களையும் கூட கைது செய்கின்ற நிலைமை கண்டிக்கத்தக்கது.என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (5) காலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றது. அதன் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,,,

யாழ் பல்கலைக்கழக ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரின் கைது மிகவும் வண்மையான கண்டனத்திற்குறியது.
யாழ் பல்கலைக்கழக ஒன்றியத்தினை பொறுத்த மட்டில் கடந்த காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி சமூக ரீதியாகவும், தமிழ் மக்களின் உரிமை சார் அரசியல் கட்டமைப்பை மீட்கும் முயற்சியிலும்  பல்வேறு விதமான ஜனநாயக போராட்டங்களை முன்னெடுத்த இந்த சூழ்நிலையில்,ஜனநாயக இடைவெளிகளை நசுக்குவதற்காகவும்,

ஜனநாயக போராட்டங்களை இல்லாமல் செய்கின்ற ஒரு போக்கை ஏற்படுத்துவதற்காகவும் இரண்டு ஆண்டுகளாக நடை பெற்றுக்கொண்டிருக்கின்ற காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம், நில விடிவுக்கான போராட்டம் , எதிர்வரும் 18 ஆம் திகதி தமிழர்களுடைய இன அழிப்பு நாளாகிய முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை ஏற்பாடு செய்து கொண்டிருந்த அல்லது ஏற்பாட்டுக்குழுவின் பிரதான ஏற்பாட்டாளர்களாக செயல்பட்ட இந்த மாணவர்களை கைது செய்தது என்பது ஜனநாயக பல்லினத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கின்ற செயலாகவே நாம் கருதுகின்றோம்.

கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.


இவ்வாறான போக்குக்கள் இனக்கமான ஒரு அரசியல் போக்கை இல்லாமல் செய்து விடும். சர்வதேச பயங்கரவாதம் என கருதப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயல்பாட்டை நசுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் அல்லது அவசர கால உப விதிகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்ற நிலையை ஏற்படுத்துவதற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சரத்துக்கள் வடக்கு-கிழக்கிலே அதிகமாக உபயோகிக்கப்படுகின்றன.

அதிகமான சோதனைச்சாவடிகள் வடக்கு கிழக்கிலே அமைக்கப்பட்டுள்ளது.

பத்து ஆண்டுகளாக தமிழ் மக்கள் இவ்வாறாள நிலமை இல்லாமல் ஓரளவுக்கேனும் நிம்மதியான சூழ்நிலையில் இருந்த ஜனநாயக இடைவெளியை இல்லாமல் செய்துள்ளனர்.

தென்பகுதியில் இவ்வாறான அவசரகால நிலமையோ,பயங்கர வாத சட்டத்தினுடைய சரத்துக்களை அமுல் படுத்துகின்ற நிலமை அதிகமாக இல்லை. நாட்டினுடைய தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வழிவகைகளை தடுக்கக்கூடியதும்,தற்காப்புக்காக செய்ய வேண்டியதும் அரசாங்கத்தினுடைய கடமையும் உரிமையும் ஆகும்.

அதனை விடுத்து தமிழ் மக்கள் மீதும்,தமிழ் போசும் மக்கள் மீதுமே இவ்வாறான செயல்பாடுகளை இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

தமிழர் தரப்பு கடந்த பாராளுமன்றத்திலே அவசர காலச்சட்டத்தை நிறைவேற்றுகின்ற போது வாக்கெடுப்பு கோராமல் அமைதியாக இருந்து ஆதரித்து வரவேற்றதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு தகுந்த பாடத்தை கற்பித்துள்ளது அண்மைய வடக்கு கிழக்கு செயற்பாடுகள் எனக்கூறலாம்.

அவசரகால தடைச்சட்டத்தினால் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் எவ்வாறான துன்பத்தையும்,துயரத்தையும் வேதனைகளையும் சிறைகளிலே இருந்து வாடிக்கொண்டிருக்கும் இந்த நிலைமைகளை புரியாத இந்த தமிழ் தலைமைகள் வாக்கெடுப்பு கூட கோராமல் அவசர கால விதிகளை ஆதரித்து விட்டு இப்போது மட்டும் மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்கின்ற நிகழ்ச்சி நிரலில் அரசியல் பேச முனைவது மிகவும் வெட்கக்கேடானதும்,சிறுபிள்ளைத் தனமான அரசியலாக இருக்கின்றது.

கூட்டமைப்பை பொறுத்தமட்டிலே அரசினுடைய ஒரு அங்கமாக இருந்து கொண்டு தமிழ் மக்களினுடைய இந்த நிலைப்பாட்டிற்கு அவர்களும் ஒரு காரணமாக அமைந்து விடுவார்களோ என்கின்ற இந்த ஜனநாயக இடைவெளிகளை இல்லாமல் செய்கின்ற இந்த போக்கிற்கும் ஜனநாயக போராட்டங்களை நசுக்குகின்ற அரசின் நிகழ்ச்சி நிரலுக்கும் துனை போகின்ற ஒன்றாகவே நாங்கள் பார்க்க வேண்டியதாக இருக்கின்றது.

தமிழ் கூட்டமைப்பினுடைய பிரதான கட்சியினுடைய தலைவர் இராணுவம் இங்கு இருக்க வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூறியதன் விளைவுதான்  இவ்வாறான எதிரொலியோ என நாங்கள் சந்தேகப்படக்கூடியதாக இருக்கின்றது.

வடக்கு கிழக்கிலே அத்தியாவசியமான நிலைப்பாடுகளுக்கு அப்பால் பாதுகாப்பு முறன்பாடுகளுக்கு அப்பால் குறிப்பாக வவுனியாவில் இருந்து மன்னாரிற்கு வருகின்ற போது ஐந்து இடங்களிலே சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் இடம் பெற்று வருகின்றது.

சுமார் 77 கிலோ மீற்றருக்குள் 5 இடங்களில் சோதனைச்சாவடிகள் மக்களின் போக்கு வரத்தை மிக மோசமாக பாதிக்கின்றது.

யுத்த காலத்தைபோல் ஒரு அச்ச நிலையும்,பயந்த பீதியையும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்துகின்ற நிலையில் இராணுவம் ஆங்காங்கே சோதனைகளையும் விசாரனைகளையும், கைதுகளையும் காரணம் இன்றி மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த விடையங்களில் சம்மந்தம் இல்லாத அப்பாவி இஸ்ஸாமியர்களையும் கூட கைது செய்கின்ற நிலைமை கண்டிக்கத்தக்கது.
ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு உள்ளவர்கள் அல்லது தௌபீக் ஜமாத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும்.அதற்கு மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் அப்பாவி இஸ்ஸாமியர்களை எந்த வித காரணமும் இன்றி கைது செய்து தமிழ் மக்கள் எவ்வாறான துன்ப துயரங்களை  அனுபவித்தார்களோ அதே நிலைப்பாட்டை இஸ்ஸாமிய அப்பாவி இளைஞர்கள் மீதும் அரசு வேண்டும் என்றே திருப்புகின்ற ஒரு நிலை காணப்படுகின்றது.

எல்லா இஸ்ஸாமியர்களையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்ற,பயங்கரவாதிகளாக பார்க்கின்ற நிலையும் கண்டனத்திற்குறியது.

ஜனநாயக இடைவெளியை இல்லாமல் போகின்ற நிலை தொடருமாக இருந்தால் மீண்டும் மீண்டும் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கிலே வசிக்க முடியாது அல்லது வெளிநாடுகளுக்கு புலம் பெயரக்கூடிய ஒரு மனோ நிலையையும்,இங்கே தமிழ் மக்களின் எண்ணிக்கையை குறைக்கக்கூடிய ஒரு நிலைப்பாட்டினுடைய மனோ நிலையையும் கொண்டு வருவதற்காகத்தான் அரசினுடைய திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாகவே நாங்கள் இதனைப் பார்க்கின்றோம்.

ஏன் எனில் யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகளுக்கு மேலும்,நாட்டை ஒரு அசாதாரண சூழ்நிலைகளிலே வைத்திருக்கக்கூடிய நிலைப்பாடுகளுக்கு அப்பால் கொண்டு செல்லுகின்ற ஒரு போக்கையே நாங்கள் காணுகின்றோம்.

ஒரு யுத்த பிரதேசம் போன்றே வடக்கு கிழக்கு எங்குமே காட்சியளிக்கின்றது.குறித்த நிலைப்பாடு வேதனையளிக்கின்றது.

தமிழர்களுடைய இன அழிப்பு நாளாகிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை செய்ய விடாமல் தடுக்கவும் அதற்கான வழியை மேற்கொள்ளவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினை காணக்கூடியதாக உள்ளது.

அரசாங்கம் இந்த ஒரு மாதத்திற்குள் இந்த அவசரகால விதிகளை தளர்த்திக்கொள்ள வேண்டும்.ஜனநாயக இடைவெளிகளுக்கு இடமளிக்க வேண்டும்.

மனித உரிமைகளினுடைய நிலைப்பாட்டை மதித்து நடக்கக்கூடிய தொன்றாக தனி மனித செயற்பாட்டிற்கும் குழு செயற்பாட்டிற்கும்,சிவில் சமூக செயற்பாட்டிற்கும் இடமளிக்கக்கூடிய ஒன்றாகவே நாங்கள் கருதுகின்றோம்.

எங்களடைய வாழ்வுரிமைக்கான கட்டமைப்பிற்கு இடமளிக்கப்பட வேண்டும்.யாழ் பல்கலைக்கழகத்திலே தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனுடைய புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகின்றது.

ஆனால் அந்த படம் பல வருடங்களாக பல்கலைக்கழகத்தில் அந்த அறையிலே இருந்துள்ளதாக அறிகின்றோம்.பல வருடங்களாக இருந்த படத்திற்காக இப்போதுள்ள மாணவர்களை கைது செய்வது என்பதை எவ்வளவு அரசியல் நோக்கில் இதனை பார்க்க வேண்டியதாக உள்ளது.

இராணுவத்தின் முடிவோ இல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸாரின் முடிவாகவே இதனை நாங்கள் பார்க்கவில்லை.

கொழும்பினுடைய நிகழ்ச்சி நிரலாகவே இந்த மாணவர்களுடைய கைதின் பின்னனியை நாங்கள் பார்க்கின்றோம்.

-மிகப்பெரிய மாணவர் எழுச்சியை தடுப்பதற்காகவும்,தமிழர்கள் மேலும் மேலும் அடிமை சாசனத்தோடு இந்த தேசத்திலே வாழ வேண்டும் என்கின்ற நோக்கோடும் தான் அவர்களுடைய இந்த மோசமான செயலை நாம் கருதுகின்றோம்.பாராளுமன்றத்தை குண்டு வைத்து தகர்ப்பேன் என்று கூறிய விமல் வீரவன்ச மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

-வடக்கு கிழக்கை இணைத்தால் இரத்த ஆறு ஓடும் என்று கூறிய ஹிஸ்புல்லா மீது நடவடிக்கை எடுக்கவில்லை.ஏனைய இஸ்ஸாமிய குழுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அவ்வாறான அரசியல் தலைமைகள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.ஆனால் சாதாரண அப்பாவிகள்,ஜனநாயகத்தன்மைகள் உள்ளவர்கள் மீதும் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவது மிகுந்த கண்டனத்திற்குறியது.இந்த நிலைமைகள் மாற்றப்பட வேண்டும்.40 ஆண்டுகள் துன்பத்தையும்,துயரத்தையும் வேதனைகளையும் அனுபவித்த தமிழ் மக்கள் மீதும்,தமிழ் பேசும் மக்கள் மீதும் இந்த நிலைப்பாட்டை தொடர்ச்சியாக அவர்கள் மேற்கொண்டு வருகின்ற சூழ்நிலை இருக்குமாக இருந்தால் இங்குள்ள இளைஞர்களை மன விரக்திக்கு உற்படுத்துகின்ற நிலையை அரசாங்கம் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்போகின்றதா??? என்கின்ற கேள்வியும்,ஐயமும் எங்களுக்கு எழுகின்றது.என தெரிவித்தார்.



யாழ் பல்கலைக்கழக ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் கைது கண்டனத்திற்குரியது-வி.எஸ்.சிவகரன் Reviewed by Author on May 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.