அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளை காய் சீ.வி. விக்னேஸ்வரன்:கறுப்பு காய் இரா. சம்பந்தன் -


வெள்ளை காய் சீ.வி. விக்னேஸ்வரன், கறுப்பு காய் இரா. சம்பந்தன் இவர்கள் இருவரும் தமிழருக்கு ஒரு தீர்வையும் தரப் போவதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.

எமது ஊடகம் முன்னாள் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் குறித்து ஒரு கருத்துகணிப்பு செய்தது. இதன்போதே பொதுமக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள், இரா. சம்பந்தன் ஆட்சிக்கு வந்து இதுவரைக்கும் எதுவும் எங்களுக்கு செய்யவில்லை. அது அவருடைய பிழையா? அல்லது அரசாங்கத்தின் பிழையா? என்பது எங்களுக்கு தெரியவில்லை.
அவருக்கு ஓய்வெடுக்க வேண்டிய வயது. அவருக்கும் அரசியலுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இருக்கக் கூடாது என நினைக்கின்றேன்.
எதிர்கட்சி பதவியை கொடுத்த அரசாங்கமே அவருடைய எதிர்கட்சி பதவியை பறித்து விட்டது. அதே அரசாங்கத்திற்கு அவர் விட்டு கொடுத்து கொண்டிருக்கிறார்.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஆகையால் காலப்போக்கில் பார்க்கப்போனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான விமோசனத்தையும் பெற்றுதரக் கூடியவர் அல்ல.
வெள்ளை காய் சீ.வி. விக்னேஸ்வரன்:கறுப்பு காய் இரா. சம்பந்தன் - Reviewed by Author on May 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.