அண்மைய செய்திகள்

recent
-

மூளை கோளாறுக்கும் நிலவுக்கும் தொடர்பில்லை: சுவிஸ் ஆய்வு! -


பைத்தியம் என்று அழைக்கப்படும் மூளைக் கோளாறுக்கும் நிலவுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக காலம் காலமாக கூறப்பட்டு வருவதையும், மூளைக் கோளாறு உள்ளவர்களைக் குறிப்பதற்காக 'lunatic' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதையும் பலரும் அறிவர்.

ஆனால் புதிய சுவிஸ் ஆய்வு ஒன்று மூளைக்கோளாறுக்கும் நிலவுக்கும் தொடர்பில்லை என்று கண்டறிந்துள்ளது.
Graubündenஇல் உள்ள Waldhaus மற்றும் Beverin ஆகிய இரண்டு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நிலவின் பல நிலைகளுக்கும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களின் நிலைக்கும் உள்ள தொடர்பு ஆராயப்பட்டது.
2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 18,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் சுவிஸ் மருத்துவ வார இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆய்வில் நிலவின் நிலைகளான பௌர்ணமி, அமாவாசை, பிறை நிலவு என எந்த நிலைகளுக்கும் நோயாளிகளுக்கும் எந்த குறிப்பிடத்தக்க தொடர்பும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்களால் கண்டறிய இயலவில்லை.
ஆனால் சில ஆய்வுகள் பௌர்ணமி அன்று மட்டும் மருத்துவமனைக்கு வரும் மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை காட்டின.
அதேபோல் மற்றொரு ஆய்வில் 91 மன நலம் பாதிக்கப்பட்டோர் பௌர்ணமியன்று ஆழ்ந்த தூக்கம் கொள்ள இயலவில்லை என்று தெரியவந்தது.

இதனால்தான் அவர்கள் மறுநாள் காலையில் மிகவும் களைப்பாக இருந்ததாக அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர்.

மூளை கோளாறுக்கும் நிலவுக்கும் தொடர்பில்லை: சுவிஸ் ஆய்வு! - Reviewed by Author on May 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.