ஒவ்வொரு இளைஞர் யுவதிகளும் திறமைசாலிகள் தான் ஆனால்-தொலைபேசியும் தொலைக்காட்சியும்-J.ஆரோக்கியம் குரூஸ்
கலைஞனின் அகம் கணணியில் முகம் விம்பம் பகுதியில் ஓய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளரும் நாடக நெறியாளரும் மறை சமூக தமிழ் தன்னார்வப்பணியாளருமாகிய தர்ம பிரபஷ்வரா தேசிய விருது பெற்ற யோசப் ஆரோக்கியம் குரூஸ் அவர்களின் அகத்திலிருந்து….
ஒவ்வொரு இளைஞர் யுவதிகளும் திறமைசாலிகள் தான் ஆனால்-தொலைபேசியும் தொலைக்காட்சியும்-J.ஆரோக்கியம் குரூஸ்
தங்களைப்பற்றி-
நான் 10ம் வட்டாரம் கலைமாடம் வங்காலை மன்னாரில் எனது மனைவி அந்தோனிக்கம்மா சோசை ஒவ்வொரு துறையிலும் மிளிர்ந்து கொண்டிருக்கும் பிள்ளைகளுடன் சந்தோசமாக கலைச்சமூகப்பணியில் ஈடுபட்டு வருகின்றேன்.
தங்களது கல்விக்காலம் பற்றி-
அது ஒரு அருமையான காலம்தான் 01-11வரை மன்.புனித மத்திய மகா வித்தியாலயத்திலும் க.பொ.த உயர்தரம் வரை மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியிலும் கற்றதோடு 1981ம் ஆண்டு பேராதனைப்பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்பு பட்டதாரியகவும் 1995ம் ஆண்டு கல்வியில் பட்டப்பின் டிப்ளோமா கொழும்பு பல்கலைக்கழகத்திலும் 2006ம் ஆண்டு கல்வியில் முதுமானி யாழ் பல்கலைக்கழகத்திலும் 2008ம் ஆண்டு கல்வி முகாமைத்துவ டிப்ளோமாவினை தேசியகல்வி நிறுவகத்திலும் பெற்றுக்கொண்டேன்.
தங்கள் பணியின் தன்மை பற்றி---
எனது முதல் நியமனமானது 12-03-1984 பட்டதாரி ஆசிரியராக பொறுப்பேற்றதுடன் 05வருடங்கள் மலைப்பிரதேசம்.
இலங்கை ஆசிரியர் சேவை தரம்-01 வகுப்பு 01இல் நிரந்தரமானதுடன் படிப்படியாக சமூககல்வி ஆசிரிய ஆலோசகராக மன்.வலயக்கல்விப்பணிமனையிலும் மன்னார் கோட்டக்கல்வி அதிகாரியாகவும் பிரதிக்கல்விப்ணிப்பாளர் மடு வலயக்கல்விப்பணிமனையிலும் தமிழ் உதவிக்கல்விப்ணிப்பாளர் மடு வலயக்கல்விப்பணிமனையிலும் 34 வருடங்கள் அரச சேவையில் கடமையாற்றி ஓய்வு பெற்றிருக்கின்றேன்.
தாங்கள் ஈடுபடும் பணிச்செயற்பாடுகள் பற்றி---
- மறைப்பணி
- பொதுப்பணி
- கல்விப்பணி
- நாடக நெறியாள்கை கலைஞர்.
1981"இது யார்குற்றம்" சமூக நாடகத்தினை பேராதனைப்பல்கலைக்கழகத்தில் மேடையேற்றினோம் பொறியியல் துறையினருக்கும் கலைத்துறையினருக்கும் போட்டியாக வந்தது நாங்கள் சமூக நாடகத்தினை மேடையேற்றினோம் அவர்கள் வேற்றுக்கிரகத்திற்கு போதல் போன்று பின்னணி காட்சியினை மிகவும் அற்புதமாக அமைத்திருந்தார்கள் அவர்களது விஞ்ஞான நாடகம் தான் 1ம் இடம் பெற்றது.எமக்கு 2ம் இடம.
நாடகமானது அன்றும் இன்றும் எப்படியுள்ளது…
அன்றைய நாடகங்கள் அந்தக்காலத்திற்கு ஏற்றவையாகவும். அருமையானவைதான் அன்று நாடகங்களும் நாடக நடிகர்களிடமும் ஆரோக்கியமான போட்டித்தன்மை இருந்தது. இன்று அவ்வாறு இல்லை நடிகர்களை தேடி பிடிக்க வேண்டியுள்ளது. இது நாடக வளர்ச்சிக்கு பெரும் தடையாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கின்றது. நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டும். ஆனாலும் தற்போது உள்ள நாடகங்கள் பல புதிய தொழில்நுட்பத்திலும் உத்திகள் நுணுக்கங்கள் போன்றவற்றின் மூலம் சிறப்பாக அமைந்துள்ளது.
1992ம் ஆண்டு மேடையேற்றிய நாடகத்தினை 2018ம் ஆண்டு மீண்டும் உத்திகளை பயன்படத்தி மேடையேற்றினோம் வரவேற்பு பெற்றது.
தங்களால் நெறியாள்கை செய்த நாடகங்கள் பற்றி…
- "இது யார் குற்றம்" சமூக நாடகம்-1981
- "வேட்டை"(திரு.சீமான் பத்திநாதன்)சரித்திர நாடகம்-1980
- "அடிகள் முன்னேற்றப்படிகள்" சமூக நாடகம்-06-10-1992
- "பாவ சங்கீர்த்தனம்"சமய நாடகம்1993 மற்றும் 2017
- "உன்னையே நீ அறிவாய்" சமூக நாடகம்-1993-1994-2002-2016
- "அப்பா வருவார்" சமயநாடகம்-1993-1998-2002
- "அவர்கள் காத்திருக்கின்றார்கள்"-சமய நாடகம்-1993-1996-2002-2017
- "வெள்ளிக்கிழமை விநோதம்" நகைச்சுவை நாடகம்-1993
- "தர்மத்தின் தலைமகன்" இலக்கிய நாடகம்-1996ல் 03தடவைகள் மேடையேற்றம்.
- "இருந்தென்ன போயென்ன" சமய நாடகம்-1996
- "இயற்பகை நாயனார்" இந்து சமய நாடகம்1996 02தடவை மேடையேற்றம்.
- "இம்பர் உலகில் இன்னொரு இறைமகன்" சமய நாடகம்-2004
தங்களது கலையார்வச்செயற்பாடுகள் பற்றி…
- கவி வாழ்த்துப்பாக்கள் 39ம்
- கண்ணீர் அஞ்சலிப்பாக்கள் 31 எழுதிக்கொடுத்துள்ளேன்.
- "வானம் பொழிந்தது அனைத்தும் நனைந்தது" விளக்கு சஞ்சிகை நடாத்திய ஆசிரியர் தினத்தினையொட்டிய சிறுகதைப்போட்டியில் 2004ம் ஆண்டு 01ம் இடம் பெற்றது.
- மொழிபெயர்ப்பு-
- ஆங்கிலத்தில் இருந்த தமிழ் மொழிக்கு
- திருத்தந்தை அவர்களின் செய்தி-மன்னா பத்தரிகை
- மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு அவர்களின் ஜனாதிபதிக்கான அறிக்கை-12-2012 மன்னா பத்திரிக்கை
- இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் பாஸ்காவிழாச்செய்தி-2007-2008-2009 ஆண்டுகளும்.
- முதியோர் சங்கம் வங்காலை-2016
- திருப்பாலத்துவ சபை வங்காலை -2016
- ஒலிப்பதிவு-12ஒலி நாடகங்கள்
- திரு.சீமான் பத்திநாதன் பர்ணாந்து அவர்களின் நூல்களான தோற்றுப்போனவர்கள் 25-11-2017
- கூத்துப்படிச்சகதை 15-10-2018
- 64 டிசெம்பர் 22-22-09-2018
- மடுப்பிரதேச செயலக வெளியீடு மடுக்கீற்று இதழ்-02-2018
- சிலுவைப்பாதை சிந்தனைகள் நூலுரு-01
- 2017 பெரிய வெள்ளிக்கிழமை பொத சிலுவைப்பாதை சிந்தனை நூலுருபெறாதவை-02 போன்ற கலைப்பணியில் என்னை ஈடுபடுத்தி வருகின்றேன்.
இக்கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் காரணம் தற்போது கலைஞர்கள் கௌரவிக்கப்படுகின்றார்கள் ஆனால் கலைஞர்கள் கௌரவத்தில் நேர்மைதன்மை இருக்கின்றதா...என்றால் அது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
திறமைக்கு இடமில்லை சிபாரிசு மற்றும் செல்வாக்குபெற்றவர்களுக்கு வழங்கப்படகின்றது இது ஆரோக்கியமான செயற்பாடு இல்லை…
தங்களின் சேவைகளுக்கு பாராட்டி கௌரவித்த விருதுகள் பற்றி---
- ஞானோபதேசிய பரீட்சை தரம்-06 திறமைச்சான்றிதழ்-1969
- அகில இலங்கை தமிழ்மொழித்தின கட்டுரைப்போட்டி- தரம்-07 2ம்இடம்-1970
- அகில இலங்கை தமிழ்மொழித்தின கட்டுரைப்போட்டி- தரம்-7-8 1ம்இடம்- 2ம்இடம்-1971
- எனது நெறியாள்கையில் 10 நாடகங்கள் 1996-1998 பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்றுள்ளது.
- சிறந்த சமூகசேவையாளர்-ஒருங்கிருக்கை நெறியாளர் பாராட்டி பொன்னாடை அணிவித்தனர்.
- தர்ம பிரபஷ்வரா கத்தோலிக்க தேசிய விருது-06-12-2018
- இலங்கை கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சு-இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம்.
தாங்கள் பணியாற்றும் அமைப்புக்கள் பற்றி---
- செயலாளர்-பாப்பாங்குளம் விவசாய அமைப்பு-2009-2019
- தலைவர்-கத்தோலிக்க ஆசிரியர்கள் சங்கம்-10 வருடங்களுக்கு மேலாக..
- கலாச்சார உத்தியோகத்தர்-கல்வித்திணைக்களம் மன்னார்-1996-1997
- செயலாளர்-புனித சு10சையப்பர் முதியோர் சங்கம்.
- தலைவர்-புனித ஆனாள் கலைஞர்கள் வட்டம்-வங்காலை
- உறுப்பினர்- புனித ஆனாள் ஆலய அருட்பணிப்பேரவை
- சங்கீர்த்தம பணி-புனித ஆனாள் ஆலய பங்கின் 29-03-2018 முதல் இன்று வரை
தங்களது பணியில் சிறப்பானவை பற்றி…
அது அளப்பரியது சுமார் 34 வருடங்களுக்கு மேலாக அரச பணியாற்றி இருக்கின்றேன் அப்படியே கலைப்பணியும் சமூகப்பணியும் ஆற்றி வருகின்றேன். இலங்கையில் எமது சிறப்பு மிக்க கிராமமான வங்காலையின் சுறுசுறுப்பாக இயங்கி வந்த 04 கலை மன்றங்கள் நாட்டின் அசாதரண சூழ்நிலை காரணமாக இடப்பெயர்விற்கு உட்பட்டு பின்பு மீளக்குடியமர்ந்த பிற்பாடு அந்த நான்கு கலை மன்றங்களையும் ஒன்றிணைத்து புனித ஆனாள் கலைஞர்கள் வட்டம் என்ற கலைஞர் அமைபினை உருவாக்கியுள்ளேன்.
வங்காலை கிராமத்தின் கலைப்பொக்கிஷமான பெரிய நாடகமான மரியசித்தாள் வாசாப்பு.
வாழும் போதே கலைஞர்களைவ வாழ்த்த வேண்டும் என்ற உயரிய சிந்தனையில் 01-01-1993 அன்று 06 கலைஞர்களை அதிவந்தனைக்குரிய ஆயர் அருட் கலாநிதி இராயப்பு யோசப்பு அவர்களால் பொன்னாடை மாலை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தமை.
26-12-2017 முதிய ஆசிரியர் அதிபர்ளான 19 பேரினை மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க பரிபாலகர் மேதகு அயர் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களினால் பொன்னாடை மாலை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தமை. இப்பணி தொடரும்....
மன்னார் மாவட்ட முதிர்ந்த 03கலைஞர்களுக்கு அரச ஓய்வூதிய நன்கொடை பெற்றுக்கொடுத்தமை.
2009ம் ஆண்டு பாப்பாங்குளம் விவசாய அமைப்பினை உருவாக்கி 2009-2017வரை அவ்வமைப்பின் செயலாளராக இருந்து அற்றிய சேவைகள் விவசாயிகளது இடப்பெயர்வினால் ஏறக்குறைய 20வருடங்கள் விவசாயம் செய்யப்படாமை அடர்ந்த காடாக (இந்திய உடைமரம்)கிடந்த ஏறக்குறைய 200 ஏக்கர் விவசாயக்காணியை அரசாங்கத்தின் உதவியுடன் துப்பரவு செய்து மீண்டும் விவசாயம் செய்ய உதவியமையும் அரசின் உதவியுடன் UNHCR உலர் உணவினைப்பெற்று ஏழைவிவசாயிகளுக்கு வழங்கி அவர்களது உதவியுடன் வாய்க்காலினை புனரமைத்தல்.
U.N.O உதவியுடன் வங்காலை-புதுக்கமம் விவசாய வீதியினை தார் வீதியாக அமைத்தல்.
இளைஞர் யுவதிகளுக்கான தங்களது அறிவுரை---
தற்போதுள்ள எல்லா இளைஞர் யுவதிகளும் திறமைசாலிகள் தான் அவர்கள் ஒவ்வொருவரும் இந்தப்பாழாய்ப்போன தொலைபேசிக்குள்ளும் தொலைக்காட்சிக்குள்ளும் தங்களை தொலைத்துள்ளார்கள்.
2016ம் ஆண்டு உன்னை நீ அறிவாய் என்ற நாடகத்தினை பழக்கி அரச நாடகவிழாவில் மேடையேற்றும் போதுதான் அவர்களின் திறமையை கண்டுணர்ந்தேன் அந்த நாடகத்தில் முதல் நடிக்க மறுத்த சிலர் பின்பு கவலையடைந்தனர் இந்த நவீனத்தில் இருந்து இளைஞர் யுவதிகளை மீட்கவேண்டும் அப்போததான் எமது இளையதலைமுறை சபீட்சமாக வாழும்.
ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளராகிய நீங்கள் தற்போதைய கல்வி நிலை பற்றி…
நவீனத்தின் கையில் சிக்கியுள்ள மாணவர்கள் அதிலிருந்து
பிரியாமல் கல்வியில் மாற்றம் இல்லை தற்போது தொலைபேசி இல்லாத ஒரு மாணவணை உங்களால் காட்ட முடியுமா…
தொலைபேசி ஒன்று வைத்திருப்பது தற்போதைய சூழலில் சமூகத்தில் மரியாதைக்குரியதும் கௌரவமான செயல் என்று நினைக்கின்றார்கள் அந்த தொலைபேசியில் நல்ல விடையங்களைப்பார்ப்பது குறைவுதான் கல்வி கற்றல் நிலை மிகவும் குறைவு கல்வியில்லாமல் இனிவருகின்ற மாணவசமுதாயம் ஐயோ…!
மன்னார் மண்ணின் பெருமையை வெளிப்படுத்தும்
நியூமன்னார் இணையம் பற்றி…
நான் சேவைக்காலத்தில் வன்னி மற்றும் மலைப்பிரதேசத்தில் கடமையாற்றியதால் ஊடகங்களை பார்ப்பது குறைவு தற்போது ஓய்வுபெற்ற பின்பு எனக்கு போதுமான நேரம் உள்ளது நியூமன்னார் இணையம் மன்னாரில் நல்ல செயற்பாடுகளை செய்து வருகின்றது.
நான் எனது இத்தனை 34வருட கலைச்சேவையினை செய்துள்ளேன் ஆனாலும் என்னை வீட்டுக்கு வந்து எனது ஆவணங்களை பார்வையிட்டு யாரும் செவ்வி கண்டதில்லை முதல் தடவையாக நியூமன்னார் இணையத்தில் இருந்து வை.கஜேந்திரனாகிய நீங்கள் செவ்வி கண்டுள்ளீர்கள் இது உண்மையில் அரிய கலைப்பணிதான் எனது குடும்பமும் நானும் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம் இது ஒரு வரலாற்றுப்பதிவாகும் எத்தனையோ கலைஞர்கள் இன்னும் மறைவாகவே இருக்கின்றார்கள் அவர்களையும் வெளிக்கொணரவேண்டும் என்னை வெளிப்படுத்திய நியூமன்னார் இணையக்குழுமத்திற்கும் உங்களுக்கும் எனத மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்...என்றும்...
நியூமன்னார் இணையத்திற்காக
சந்திப்பு--வை.கஜேந்திரன்-

ஒவ்வொரு இளைஞர் யுவதிகளும் திறமைசாலிகள் தான் ஆனால்-தொலைபேசியும் தொலைக்காட்சியும்-J.ஆரோக்கியம் குரூஸ்
Reviewed by Author
on
June 22, 2019
Rating:

No comments:
Post a Comment