மன்னார் மடு பகுதியில் பேருந்தில் வைத்து பாடசாலை மாணவி மீது ராணுவ சிப்பாய் பாலியல் சேட்டை
மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு அரச பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது அப்பேருந்தில் பயணித்த ராணுவ சிப்பாய் ஒருவர் பாலியல் சேட்டை மேற்கொண்ட நிலையில்,குறித்த சிப்பாயியை முருங்கன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று புதன்கிழமை (18) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி மடு பகுதியில் இருந்து அரச பேருந்தில் பாடசாலைக்கு பயணித்துக் கொண்டிருந்த நிலையில் குறித்த பேருந்தில் பயணித்த ராணுவ சிப்பாய் குறித்த மாணவிக்கு பாலியல் சேட்டை புரிந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் முருங்கன் பொலிஸார் இராணுவ சிப்பாயியை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Reviewed by Vijithan
on
June 18, 2025
Rating:


No comments:
Post a Comment