அண்மைய செய்திகள்

recent
-

வெலிக்கடை சிறைச்சாலையில் மரணித்த தளபதிகள் இல்லையென்றால் போராட்ட வரலாறு இருந்திருக்காது--பிரதேச சபை உறுப்பினர் A.மோகன்.

அன்றைய காலகட்டத்திலே வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய வீரர்கள் இல்லையென்றால் இன்றைய விடுதலைக்கான போராட்ட வரலாறு இல்லையென்றே நாம் சொல்ல வேண்டும் என மன்னார் பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அந்தோனி தற்குரூஸ் லுஸ்ரின் மோகன் இவ்வாறு தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட இயக்க தளபதி மற்றும் வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட 36 வது ஆண்டு நிறைவு நாள் நேற்று முன்தினம் வியாழக் கிழமை (25.07.2019) மன்னார் ரெலோ மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

பல அரசியல் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்ட  இவ் நிகழ்வுக்கு
தலைமைதாங்கிய மன்னார் பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அந்தோனி தற்குரூஸ் லுஸ்ரின் மோகன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

இன்றைய நாளிலே எமது விடுதலைக்காக தேசியத்துக்காக தங்கள் வாழ்வை
அர்பணித்து அறவழி போராட்டத்துக்குச் சென்று வெலிக்கடைச் சிறையிலே மிகவும் பயங்கரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட எமது வழிகாட்டிகளான முன்னன்னாள் தளபதி மற்றும் முன்னனி வீரர்களை நினைவு கூறும் நாளாக இன்றைய நாளை நாம்
நினைவு கூறுகின்றோம்.

அவர்கள் படுகொலை செய்யப்பட்ட 36 வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இதை நினைவு கூர்ந்து நாம் இங்கு ஒரே குடும்பமாக ஒன்று கூடியுள்ளோம்.

அன்றைய கால்கட்டத்திலே இந்த தமிழ் தேசிய வீரர்கள் இல்லையென்றால் இன்றைய விடுதலைக்கான போராட்ட வரலாறு இல்லையென்றே நாம் சொல்ல வேண்டும்.

அந்தவகையில் அவர்கள் ஆரம்பக்கால போராட்டத்தை முன்னெடுத்து இன்று பல அமைப்புக்களாக உருவெடுத்த அணைத்து அமைப்புக்களுக்கும் ஓர் வழிகாட்டிகளாக இருப்பதை நாம் அறிவோம்.

அவர்களின் வீரம் நிறைந்த அந்த செயல்பாடுகள் இந்நாளில் எமக்கு ஒரு
எழுச்சியைத் தந்துள்ளது. 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற மிகவும் மோசமான
கொடூரமான பேரினவாதத்தின் கோர முகத்தின் வெளிப்பாடு இந்த படுகொலையாக இருக்கின்றது.

இதன் விளைவாகவே அன்று பேரட்சியோடு பெருந் தொகையான இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்துக்கு தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இவ் போராட்டம் பெரும் வளர்ச்சியைக் கண்டது.
காலத்துக்குக் காலம் எமது போராட்ட வடிவங்களை மாற்றி வழிநடத்தப்பட்டுக்
கொண்டிருக்கின்றதைத் தவிர அது இன்னும் தோற்றுப் போகவில்லை.

இன்று நாம் அரசியல் தந்திர உபாய போராட்டத்தில் செயல்பட்டுக்
கொண்டிருக்கின்றோம். அன்றையக் காலக்கட்டத்தில் எமது மூத்த போராளிகள் முன்னெடுத்துச் சென்ற அந்த பாதைக்குப் பின் எமது இளைஞர்கள் வழிநடந்து எமது விடுதலைக்காக செயல்பட்டிருக்கின்றார்கள்.

அந்த வழியில் நாமும் செயல்பட்டிருக்கின்றோம். எமது எதிர்கால சந்ததினரின் இருப்புக்காக இவ் போராட்டம் முன்னெடுக்க்பட்டிருக்கின்றது.

இன்று இந்த 36 வது ஆண்டு நிறைவிலே நாம் அவர்களின் வீரத்தை நினைவு
கூர்ந்து நாம் மட்டுமல்ல தமிழ் தேசியம் எங்கும் இது நினைவு கூறப்பட்டுக்
கொண்டிருக்கின்றது.

அத்துடன் புலம் பெயர்ந்து வாழும் எமது மக்கள் இருக்கும் அனைத்து
நாடுகளிலும் இது நினைவு கூறப்பட்டு வருகின்றது. எழுச்சிமிக்க இந் நாள்
ஒட்டுமொத்த அனைத்து தமிழ் நெஞ்சங்களிலும் மறக்க முடியாத ஓர் நினைவு நாள் என்பது நாம் அறிவோம்.

எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வித்திட்டவர்கள் என்பதாலும்
இவர்கள் எமது போராட்டத்தின் வழிகாட்டிகள் என்பதாலும் இவர்கள் எம்
அனைவரின் மனதிலும் அனையாத தீபமாக இருந்து கொண்டிருப்பார்கள். இவர்களின் விடுதலை கனவோடு நாமும் தொடர்வோம் என்றார்.








வெலிக்கடை சிறைச்சாலையில் மரணித்த தளபதிகள் இல்லையென்றால் போராட்ட வரலாறு இருந்திருக்காது--பிரதேச சபை உறுப்பினர் A.மோகன். Reviewed by Author on July 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.