அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய காலப்பிள்ளைகள் மத்தியில் ஆன்மீகம் குறைந்து செல்லுகின்றது.அருட்பணி கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார்.

இன்றைய காலப் பிள்ளைகள் மத்தியில் ஆன்மீகம் குறைந்து செல்லுகின்றது.
ரியூஷன் என்றால் விழுந்தடித்துச் செல்லும் மாணவர்கள் இப்பொழுது ஆன்மீக
வாழ்விலும் ஆலயம் செல்வதிலும் பின் நிற்கும் நிலையிலேயே காணப்படுகின்றனர் என மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி, திருவிவிலியம், கல்விப்பணி இயக்குனர் அருட்பணி கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை 14.07.2019 மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி,
திருவிவிலியம், கல்விப்பணி இயக்குனர் அருட்பணி கி.அந்தோனிதாஸ் டலிமா  அடிகளார் பேசாலை பங்குக்கு விஐயத்தை மேற்கொண்டு அங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறைவாழ்வு பணியாளர்களுக்கு மத்தியில்  தொடர்ந்து உரையாற்றுகையில்

மனிதனைத் திருப்திப்படுத்த நினைத்தால் இறைவனை திருப்திப் படுத்த
முடியாது. உயர்ந்த கல்வியாளன்தான் மறை வாழ்வு சமூகப் பணியாளனாக இருக்க வேண்டும் என்பல்ல. மாறாக எவனொருவன் அர்ப்பணிப்புடன் இருந்து
செயல்படுகின்றானோ அவன்தான் உன்னதமான மறைவாழ்வு சமூகப் பணியாளனாக இருப்பான்.

ஒவ்வொரு மறைவாழ்வு பணியாளனும் சமயம் சார்ந்த புத்தகங்களை வாசிக்கும் நற்பழக்கம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் 'பானைக்குள் இருந்தால்தான் அகப்பபையில் வரும்' என்பதுபோல் நீங்களும் பல தேடுதலில் அறிவுகளை பெற்றிருந்தால்தான் உங்களை நம்பியிருக்கும் மாணவகளுக்கு அது நன்மை பயக்கும்.

இன்றைய சூழ்நிலையில் நாம் எமது பிள்ளைகளுக்கு நல்ல விழுமியங்களை ஊட்ட வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஏனென்றால் இன்றைய காலம் மிக மோசமான நிலைக்கு ஒவ்வொரு மனிதனையும் இட்டுச் செல்லகின்றது. இதிலிருந்து மாணவர்களும் நாமும் விடுபட வேண்டுமானால் ஆன்மீகம் அவசியமாகின்றது.

ஆகவே மறைவாழ்வு பணியாளர்கள் ஒவ்வொருவரும் ஆன்மீக வளர்ச்சியில் ஒவ்வொரு வரையும் இட்டுச் செல்ல தங்களின் அர்ப்பணிப்பான சேவையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என வேண்டிக் கொண்டார்.

அத்துடன் இதேவேளையில் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய மறைகல்வி மாணவர்களுக்கான விஷேட திருப்பலி ஒப்புக்கொடுத்த வேளையில் மாணவர்களுக்கான மறையுரையில் அருட்பணியாளர் கி.அந்தோனிதாஸ் டலிமா இங்கு மறைக்கல்வி மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் நாம் இப்பொழுது இருப்பதும் வாழ்வதும் இறைவன் எம்மீது கொண்டிருக்கும் அன்பின் காரணமாகவே. ஆகவே நாம்
எப்பொழுதும் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அவ்வாறு பிள்ளைகளாகிய நீங்கள் உங்கள் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றியுள்ளவர்களாக திகழ வேண்டும். நாம் பல நிலைகளில் நலமுடன் இருக்கின்றோம் என்றால் எல்லாம் இவர்களின் ஆசீரும் அர்ப்பணிப்புமே. வழிப்போக்கன் ஒருவன் குற்றுயிராக கிடந்த வேளையில் சமாரியன் ஒருவன் அவ்
 வழியால் சென்றபோது இவனைக் கண்டு தனது நேரத்தை, பணத்தை ஒன்றையும் நோக்காது அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்தான் என வேதாகமம் கூறுகின்றது.

இதுபோன்றே பெற்றோர் ஆசிரியர் உங்களுக்கும் பல நன்மை தனங்களை, பணிகளை செய்து வருகின்றனர் என்பதை மறவாதீர்கள்.

இப்பொழுது இன்றைய காலப் பிள்ளைகள் மத்தியில் ஆன்மீகம் குறைந்து கொண்டு செல்லுகின்றது. ஞாயிறு திருப்பலியானது கத்தோலிக்கராகிய எமக்கு மிகவும் முக்கியமானது ஒன்றாகும் என்பது உங்களுக்குத் தெரியும்

உங்களில் இன்று எத்தனைபேர் முழுத் திருப்பலியில் பங்குபற்றுகின்றிர்;கள்
என்பதை நீங்களே உங்களுக்குள் ஆய்வு செய்து பாருங்கள்.
ரியூஷன் என்றால் விழுந்தடித்துக் கொண்டு செல்லுகின்றீர்கள். அது தவறல்ல.
அனால் இறைவனைத் தேடுவதில் உங்களுக்கு இருக்கின்ற நிலைப்பாட்டை நீங்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.



இன்றைய காலப்பிள்ளைகள் மத்தியில் ஆன்மீகம் குறைந்து செல்லுகின்றது.அருட்பணி கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளார். Reviewed by Author on July 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.