Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

சீமைக் கருவேலமரங்களினால் ஆபத்தானநிலையில்- மன்னார் மாவட்டம்.


சீமைக் கருவேலமரங்களினால் ஆபத்தானநிலையில் மன்னார் மாவட்டம்.....
இந்தியாவின் தமிழ்நாட்டில் சீமைக் கருவேலம் என்றும் வேலிகாத்தான் என்றும் பரவலாகஅறியப்படும் இத் தாவரம் வேளான் நிலங்களையும் பிறவாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு கொடிய தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் ப்ரோசோபிச் சூலிஃப்லோரா என்பதாகும். கருவேலமரங்கள் இரண்டுவகை உண்டு. ஒன்று சீமைக் கருவேலமரம் இரண்டாவது கருவேலமரம் ஆகும்.

கருவேலமரத்தை நாம் இலங்கை உடை எனவும் அழைப்பதுண்டு இதனுடைய பூக்கள் உருண்டை வடிவானது. இம் மரங்கள் மனிதனுக்கும் விவசாயத்திற்கு ஆபத்தைஏற்படுத்துபவை அல்ல. ஆனால் சீமைக் கருவேலமரங்கள் ஆபத்தைஏற்படுத்துபவை. இதனுடைய பூக்கள் பூனையின் வாள் போன்று இருக்கும். இவ் இரண்டு மரங்களையும் அதனுடைய செழிப்பான தன்மையைக் கொண்டு நாம் இலகுவாக அறிந்துவிடலாம்.

சீமைக் கருவேலமரமானதுமெக்சிக்கோதென் அமெரிக்காகருபியன் தீவுகளைப் பிறப்பிடமாகக் கொண்டது.வேலிகாத்தான் எனஅழைக்கப்படும் இந்தமுற்செடிகள்ஆசியாஅவுஸ்திரேலியாநாடுகளுக்குகடத்தப்பட்டு 1950ம் ஆண்டுஅவுஸ்திரேலியாவிலிருந்துவிறகுக்காகவும் விளைநிலங்களைச் சுற்றிவேலியாகவும் அமையும் என்கின்றதேவைக்காகஅப்போது இருந்தஅரசியல்வாதிகளினால் இந்தியாவுக்குவிதைகளாககொண்டுவரப்பட்டது. இது வெளிநாட்டில் இருந்துவந்தமையினால் சீமைக் கருவேலமரம் என்றும். வீட்டின் வேலிகளாகபயன்படுவதினால் வேலிகாத்தான் என்றும் அழைக்கப்படுகின்றது.இம் மரம் 12 மீற்றர் உயரம்வரைவளரக்கூடியது.
அமெரிக்கதாவரவியல் திணைக்களம் வளர்க்கக்கூடாதநச்சுத் தாவரங்களின் வரிசையில் முதலிடத்தில் இந்தசீமைக் கருவேலமரத்தைவைத்துள்ளது. இதனைஅமெரிக்கா வேளான்மைத் தொழிலில் நச்சித் தாவரம் என வரையறுத்து கண் காட்சியகத்தில் வைத்துள்ளது. இந்த நாடுகள் இதன் ஆபத்தை உணர்ந்து தமது நாட்டிலிருந்து.

 இத்தாவரத்தைமுற்றாகஅகற்றியுள்ளனர்.வேலிக்காகவளர்க்கப்பட்ட இம்மரங்களில் கூறியமுற்கள் இருப்பதினால் கால் நடைகள் இதனைச் சீண்டுவதில்லை.அதனைமீறி இத் தாவரங்களையும் அதன் காய்களையும் உண்ணும் ஆடு மாடுபோன்றகால் நடைகள்உணவுசெரிமானம் அடையமுடியாமைமற்றும்மலட்டுத் தன்மையுடையதாகவும் இவை ஈணும் குட்டிகள் கண்றுகள் ஊனமாகப் பிறப்பதாகஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இம் மரங்களில் எந்தப் பறவைகளும் கூடு கட்டுவதில்லை. காரணம் இம் மரங்கள் ஒட்சிஜன்களுக்குபதிலாகஅதிகஅளவானகாபனீர் ஒட்சைடுகளைவெளியிடுவதினால் இம் மரங்களில் பறவைகள் கூடுகட்டுவதில்லை. இம் மரத்தின் அருகில் வசிப்பவர்கள் சுவாசிக்கும் காபனீர்ஒட்சைடுகாற்றினால்மலட்டுத்தன்மைகர்ப்பம் தரித்தபெண்களின் குழந்தைகள் கருச் சிதைவுக்குஉள்ளாகுதல் மற்றும்குழந்தைகள் ஊனமாகபிறப்பதாகதமிழகமருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால்தான் தமிழ் நாட்டில் இம் மரங்களைகருவைஅருக்கக்கூடியகருவேலமரம் என இதனைஅழைக்கின்றனர்.

நீர் ஆதாரங்களில் வளரும் இம் மரங்கள் அந் நீரில் 3 வீதத்தைமரங்களின்செல் வளர்ச்சிக்கும். எஞ்சியுள்ள 97 சதவீதநீரை இலைகள் வழியாகஆவியாகவெளியேற்றவும் செய்கின்றது. இம் மரங்களின் வேர்கள் 40 அடிஆழத்திலும் 40 அடிஅகலத்திலும் தனதுவேர்களைபறவவிட்டுநிலத்தடிநீரைஉரிஞ்சிக் கொண்டுமண்ணையும் மலட்டுத் தன்மையாக்குகின்றது.
எந்த இடமாக இருந்தாலும் மற்றத் தாவரங்களைஅழித்துவிட்டுதான் மட்டும் செழித்துவாழும் தன்மைசீமைக்கருவேலமரங்களுக்குமட்டுமேஉண்டு.இவை ஆழமானவேர்களைக் கொண்டதால் நிலத்தடிக்குசெல்லும் நீரைத் தடுத்துவிடுகின்றது.மழை இல்லாமல் போனாலும் நிலத்தடிநீரைஉரிஞ்சிதனது இலைகள் வாடாமல் இருப்பதைப் பார்த்துக் கொள்ளுகின்றது. இம் மரத்தைஎந்தநோயினாலும் தாக்கமுடியாது. ஒருவேளைநிலத்தடிநீர் கிடைக்காமல் போனாலும் காற்றிலுள்ளஈரப்பதனைஉரிஞ்சிக் கொண்டுவாழக்கூடியதன்மைகொண்டது.
காற்றின் ஈரப்பதன்களைஅதிகம் உரிஞ்சிக் கொள்வதினால் இம் மரங்களுக்குஅருகில் நாம் செல்லும்போது அதிகவெப்பத்தை உணரமுடியும். தனதுவளர்ச்சிக்காகமனிதனில் உள்ளஈரப்பதனையும் உரிஞ்சிக்கொள்ளும் தன்மை இம் மரங்களுக்குஉண்டு. இதனால் இம் மரங்களுக்குஅருகாமையில் வசிப்பவர்களின் தோல்கள் வரண்டுகாணப்படுவதாகபலவகையானதோல் சார்ந்தநோய்களுக்குஉள்ளாவதாகவும்தெரிவிக்கப்படுகின்றது.

சீமைக் கருவேலமரம் அதிகம் உள்ளபகுதிகளில் மழைபெய்யும் வாய்ப்பும் மிகக்குறைவுஎன்றுஆய்வுகளும் கூறுகின்றன. இவை வளரும் பகுதியைக் கட்டுப்படுத்தவில்லையென்றால் அப்பகுதிபாலைவனமாகும் என்றுசுற்றுச் சூழல் ஆர்வளர்கள் எச்சரிக்கின்றனர். இத் தாவரத்தைகேரளமக்கள் ஆரம்பத்திலேயேஅழித்தமையுடன் அம் மகிழ்ச்சியைக் கொண்டாடஅழித்தமரங்களைச் சுற்றிநடனமாடிமகிழ்ந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால்தான் அம் மானிலம் எப்போது நீர் நிலைகளுடனும் பூரணமழை வீழ்ச்சியுடனும் இருப்பதாகஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் நாட்டின் மொத்தநிலப்பரப்பில் 25 வீதநிலத்தைஆக்கிரமித்த இத் தாவரம் வேளான்மையைபால்படுத்திவருகின்றது. இம்மரத்தை விறகாகபயன்படுத்தும் மக்கள் இதிலிருந்து வெளியேறும் புகையைசுவாசிக்கின்றபோது. அப் புகையானது 16 சிகரட்களின் புகைகளுக்குசமனானது என்றும் இதனால் புற்றுநோயை உண்டாக்கக்கூடியதன்மையுள்ளதாகவும் இவ் விறகுகளில் இருந்துமின்சாரம் எரிவாயு போன்றனத யாரிக்கலாம் என்றும் ஆராட்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இம் மரங்களினால் சிலநன்மைகளும் உண்டு. ஏழைமக்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்திசெய்கின்றது. எளியமக்களின் வேலியாக அமைந்து காணிகளை எல்லைப்படுத்துகின்றது. மற்றும் மின்சாரம் எரிவாயுஎன்பவற்றையும் இதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
இலங்கைக்கு இம் மரம் எப்போதுவருகைதந்ததுஎன்பதங்கு 3 காரணங்கள் கூறப்படுகின்றது.

அவை இந்தியா இராணுவம் இலங்கைக்க வருகை தந்தபோது அவர்களுக்கு உணவுக்காக தலைமன்னார் பகுதியூடாககப்பலில் கொண்டுவந்த செம்மறி ஆடுகள் போட்ட புளுக்கைகளில் சீமைக் கருவேலமரங்களின் வித்துக்கள் இருந்தமையினால் அவ் எச்சங்களில் இருந்து இம் மரம் வளர்ந்ததாகவும்.

இந்திய இராணுவம் உலங்குவானூர்தி மூலம் இம் மரத்தின் வித்துக்களைவிறகிற்காக இலங்கையில் நிலத்தில் தூவியதாகவும் அதிலிருந்து இம் மரங்கள் முளைத்ததாகவும்.
இலங்கையில் அரசாங்கத்தில் பணிபுரிந்த ஊளியர்கள் இவ் விதைகளை இலங்கைக்குஅறிமுகம் செய்துஅவற்றை இந் நாட்டில் நிலத்தில் விதைத்ததாகவும் 3 கருத்துக்கள் உலாவுகின்றது.

எது எவ்வாறு இருந்தாலும்  இன்றுவடமாகாணத்தில் பல இடங்களில் இம் மரங்களைகாணக்கூடியதாக இருக்கின்றது.குறிப்பாக இந்திய இராணுவம் குடியிருந்த இடங்களுக்குஅருகாமையில் அதிகம் இருப்பதை இனங்காணக்கூடியதாக இருக்கின்றது. இதில் குறிப்பாகமன்னார் மாவட்டத்தின் மன்னார் மற்றும் மாந்தைமேற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தள்ளாடி தொடங்கி இலுப்பக்கடவைவரையிலான நிலப்பரப்பில் சீமைக் கருவேலமரங்கள்அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளதை இனங்காணக் கூடியதாக மன்னார் மக்களினால் உணரப்பட்டுள்ளது.

 இவ் நிலப்பரப்பிற்கு இடைப்பட்டகிராமங்கள் பொதுநோக்குமண்டபங்கள் பாடசாலைகளில் கூட இம் மரங்களின் நிலழ்களில்மக்கள் இம் மரத்தின் தன்மை தெரியாமல் ஓய்வெடுத்துக் கொள்வதை இனங்காணக்கூடியதாக உள்ளது வேதனையளிக்கும் விடயமாகும். குறிப்பாக வடமாகாணத்தில் பாத்தினியத்தை அழிப்பதில் நாம் காட்டியஆர்வம் சீமைகருவேலமரத்தை அழிப்பதில் நாம் காட்டவில்லையோ என்கின்ற எண்ணம் ஏற்படுகின்றது.

அத்துடன் மக்களுக்கும் இம் மரத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பானபோதுமாவிளக்கமில்லாமலும் இருக்கவாய்ப்பிருக்கின்றது. நிலத்தையும் நீரையும் விவசாயத்தையும் அழிக்கும் மிகமுக்கியமானதாவரங்கள் 3 உள்ளதுஅவை சீமைக்கருவேலமரம் பாத்தினியம் ஆகாயத்தாமரை. இதில் அதிகபாதிப்பைஏற்படுத்துபவைசீமைக் கருவேலமரங்களாகும்.

அப்படியானால் இதனைஅழிப்பதற்குஎன்ன வழி. இச் சீமைக்கருவேலமரங்களை அழிப்பதற்காக தென் அமெரிக்கா கருபியன் தீவுகள் மெக்சிக்கோ போன்ற நாடுகள் கையாண்டுவழிமுறைகள் பின்வருமாறு இலை உதிர்க்கும் பூச்சிகளை கருவேலமரங்களில் விடுதல் மூலம் அவை இலைகளை உதிரச் செய்துமரங்களைச் சேதப்படுத்துகின்றன இதனால் கருவேலமரங்கள் பட்டுப்போகின்றன.

சாறுஉரிஞ்சும் வண்டுகளைகருவேலமரங்களில் விடலாம். இதனால் மரச்சாரை உரிஞ்சிமரத்தைப் பட்டுப்போகச் செய்யும்.
சீமைகருவேலமரங்களைது JCB யின் உதவியுடன் வேரோடுஅகற்றியபின்னர் அந்த இடங்களில் வீட்சைடுஎனப்படும் களைக்கொல்லியைத் தெளிக்கலாம் இதனால் கருவேலமரங்கள் மீண்டும் வளராது.

JCB யினால் அகற்றப்பட்டமரங்களின் இடங்களில் பயன் தரக்கூடியதும் நிலத்தடிநீரைப் பாதுகாக்கக்கூடியதுமானபுதியமரங்களைநாட்டுதல்.
இவ்வாறுஅரசுடன் இணைந்து இக் கருவேலமரங்களைஅகற்றுவதற்கான புதிய குழுக்களை பிரதேசங்கள் தோறும் உண்டாக்கி மக்கள் மத்தியில் இம் மரத்தினால் ஏற்படும் தீமைகள் தொடர்பாக விழிப்புணர்வுவழங்கி கிராமங்கள் தோறும்.   இதனைஅகற்றுவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் தழில் நாட்டில் 25 வீதமான நிலப்பரப்பைகருவேலமரங்கள் ஆக்கிரமித்து நீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது போன்று நாமும் நம் நிலத்தையும் நிலத்தடிநீரையும் விவசாயத்தையும் இழக்கவேண்டிய சூழ்நிலைக்குஉள்ளாவோம்.

ஊர் கூடித் தேர் இழுத்தால் எந்தவேலையும் எளிதாகமுடியும்.
பாரி

0772930760

சீமைக் கருவேலமரங்களினால் ஆபத்தானநிலையில்- மன்னார் மாவட்டம். Reviewed by Author on July 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.