அண்மைய செய்திகள்

recent
-

13வது திருத்தச் சட்டம் எவ்வளவு வலுவற்ற சட்டம்-நீதிமன்ற தீர்ப்பு குறித்து சி.வி.விக்னேஸ்வரன்


13வது திருத்தச் சட்டம் எவ்வளவு வலுவற்ற சட்டம் என்பது இப்பொழுது எல்லோருக்கும் புரிந்திருக்கும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இனியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றெடுக்க முன் வருவார்களா? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

வாராந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
கேள்வி: டெனிஸ்வரன் வழக்கு உங்களுக்கு எதிராக இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். அதுபற்றி?
நீதியரசர்கள் ஒருமுக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுக்கவில்லை போல் தெரிகின்றது. அதாவது, டெனிஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்குவதாகக் கூறி அனுப்பிய எழுத்திலான கடிதம் ஆளுநரிடம் சேர்ப்பிக்கப்பட்டது.
அதன் பின்னரே புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். முன்னைய அமைச்சரை நீக்குவதாக அவருக்கு அறிவிக்கப்பட்டும் ஏன் அதனை ஆளுநர் வர்த்தமானியில் பிரசுரிக்கவில்லை என்ற கேள்வியை நீதியரசர்கள் கேட்கவில்லை.

கேட்டிருந்தால் நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்துப் பற்றி நீதியரசர்கள் ஆராய்ந்திருக்கத் தேவையில்லை. ஆளுநர் தன் கடமையில் தவறிவிட்டார் என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.
எனினும், ஆளுநருக்கே சகல உரித்துக்களும் உண்டு என்று நீதிமன்றம் கூறுவதில் இருந்து 13வது திருத்தச்சட்டத்தின் குறைபாட்டை மக்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது.
இந்த 13வது திருத்தச் சட்டத்தை ஒட்டிய அரசியல் யாப்பையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ‘புதியயாப்பு’ ‘புதியயாப்பு’ என்று துள்ளுகின்றது. ஆளுநர் அரசாங்கமுகவர் முதலமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்.
மக்கள் பிரதிநிதிக்கு இல்லாத உரித்து ஆளுநருக்கு உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளதை வைத்து 13வது திருத்தச் சட்டம் எவ்வளவு வலுவற்ற சட்டம் என்பது இப்பொழுது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.

இனியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றெடுக்க முன் வருவார்களா?
இதேவேளை, வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை, முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் பதவி நீக்கம் செய்த முறை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
13வது திருத்தச் சட்டம் எவ்வளவு வலுவற்ற சட்டம்-நீதிமன்ற தீர்ப்பு குறித்து சி.வி.விக்னேஸ்வரன் Reviewed by Author on August 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.