அண்மைய செய்திகள்

recent
-

ஆவணி மடு பெருவிழாவுக்கு பெருந்தொகையான பொலிசார் பாதுகாப்பில்-மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஐபக்ச

முன்னையவிட இம்முறை மடு பெருவிழாவுக்கு இரட்டிப்பான தொகை பொலிசார் பாதுகாப்பில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மடு பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஐபக்ச மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மடு விழாவுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
திங்கள் கிழமை (30.07.2019) மன்னார் மாவட்ட செயலகத்தில்
அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்ராஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

மடு ஆலய உற்சவத்தின்போது மேற்கொள்ள இருக்கும் பாதுகாப்பு சம்பந்தமாக மடு பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஐபக்ச தொடர்ந்து தெரிவிக்கையில்

கடந்த மடு விழாவை போல் அல்லாது இம்முறை ஆயிரம் பொலிசார் எதிர்வரும் ஆவணி பெருவிழாவுக்கு கடமையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த காலங்களைவிட இம்முறை மடு விழாவுக்கான பொலிஸ் பாதுகாப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. இத்துடன் விஷேட அதிரடி பொலிசாரும் மற்றும் கடற்படை, இராணுவமும் இணைந்த பாதுகாப்புக்குமான ஏற்பாடுகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மன்னார் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது.

மடு ஆலய வளாகத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதுக்கு அடையாளமாக வாகன கண்ணாடிகளில் ஸ்ரிக்கர்கள் ஒட்டுவதற்காகவும் திட்டமிட்டுள்ளோம்.

வாகனங்களை ஆலய வளாகத்துக்குள் தரித்து நிற்பதற்காக ஐந்து இடங்கள்
அடையாளமிடப்பட்டுள்ளன. பெரும்பாலும் மக்கள் மடு வளாகத்துக்குள்
மரங்களுக்கு கீழ் வாகனங்களை தரித்து நிறுத்துவதில் கவனம் செலுத்தி
வருகின்றன
உடற் பரிசோதனைகளுக்கான கருவிகள் எமக்கு கிடைக்கப்பெற இருப்பதால்
பரிசோதனைகளை வேகமாக செய்து கொள்ள வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

கூடாரம் அமைத்து தங்கும் பக்தர்களின் நலன்கருதி ஒன்பது பகுதிகளாக
பிரிக்கப்பட்டு இவர்கள் தங்கும் இவ் பகுதிகளில் பலத்த பொலிஸ்
பாதுகாப்புக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

மடுத் திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்கள் குழிப்பதற்கான இடங்களாக
காணப்படும் தட்சணாமருதமடு, குஞ்சுக்குளம் பகுதியில் தற்பாதுகாப்பு
பொலிசாரும் ஈடுபடுத்தப்பட இருக்கின்றார்கள்.

கடந்த விழாவின்போது வீதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் பெரும் சிரமங்கள் தோன்றியிருந்தமையால் இம்முறை இவை நடாவாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வெடிக்குண்டு செயலிழக்கும் மற்றும் மோப்பநாய் கொண்டு செயல்படும்
பாதுகாப்பு பிரிவினரும் நாளாந்தம் மாலை ஆராதனைகளுக்கு முன்பு உட்சவம் நடக்கும் இடத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு
உறுதிப்படுத்தப்படும்.

களவு, போதைவஸ்து பாவனை விற்பனை மற்றும் குற்றச் செயல்களில்
ஈடுபடுவோருக்காக குற்றத்தடுப்பு பொலிசாரும் ஈடுபடுவர். இவற்றை
தடுப்பதற்கான நடவடிக்கையாக பெருந்தொகையான சிவில் உடையில் தேசிய, மன்னார், வவுனியா பகுதி பொலிசார் கடமையில் ஈடுபடுவர்.

இத்துடன் குற்றச் செயல்கள் ஏற்படா வண்ணம் முப்படைகளின் ஒருங்கிணைந்த பாதுகாப்பையும் மேற்கொள்ளப்படும் என மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஐபக்ச இவ்வாறு தெரிவித்தார்.


ஆவணி மடு பெருவிழாவுக்கு பெருந்தொகையான பொலிசார் பாதுகாப்பில்-மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஐபக்ச Reviewed by Author on August 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.