அண்மைய செய்திகள்

recent
-

பண்பாடுகளை மறந்த இனம் அழிந்ததிற்கு சமம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டுப் பெரு விழாவில்- சி.சிவமோகன்MP

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் ம.பிரதீபன் தலைமையில் புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டு பெரு விழாவானது நேற்று 02-08-2019 இரண்டு மணியளவில்  தமிழர்களின் பூர்வீகங்களை பறைசாற்றும் விதத்திலும் பண்டைய தமிழரின் வாழ்வியலை ஞாபகமூட்டும் விதத்திலும்  அமைந்த சான்றுப் பொருட்கள் அடங்கிய பவனியானது புதுக்குடியிருப்பு குழந்தையேசு கோவிலில் ஆரம்பித்து புதுக்குடியிருப்பு சந்தி வழியாக  புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தினை அடைந்து அங்கு கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றது.
 நடைபெற்றது இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிவமோகன்MPஇவ்வாறு தெரிவித்தார்

மேலும் உரையாற்றிய சிவமோகன்MP கலாச்சாரம் என்பது ஒரு இனத்தின் அடையாளம் எந்த ஒரு இனம் தனது கலாச்சாரத்தை  இழக்கிறதோ அப்போதே அந்த இனம் தன்னை தானே அழித்துக்கொண்டள்ளது

இந்த புதுக்கடியிருப்பு மண்ணுக்கு சகல விதத்திலும் தனியான அடையாளம் உண்டு இந்த மண் விவசாய மண் அதிகமாக வேளான் குடி மக்கள வாழும் பிரதேசம் முன்னைய  பயிர்ச் செய்கை காலங்களில்  உழவு செய்ய ஆரம்பிப்பதிலிருந்து அருவி வெட்டி சூடு அடிக்கும்  காலம் வரை ஆண் பெண் என்று அனைவருக்கும்  வேலைகள் இருந்தது  அநாவசிய செலவுகள் இல்லை தங்களது தேவைக்கு ஏற்ப கையில் பணம் புழங்கியது இன்று நாற்று நடும்போது  களை பிடுங்கும் போது அருவி வெட்டும்  போது என ஐம்பதிற்கும் மேற்பட்டோர் வேலை செய்வார்கள் சூடு வைத்து அதை அடித்து பொலி நிமிர்த்தி நாங்கள் செய்யும் ஒரு திருவிழா  அங்கே சூடு அடித்த வைக்கோலை கொண்டு வந்து கால்நடைகளுக்கு தீவணமாக போடுவோம்  அதுவே நமது பாரம்பரிய பண்பாடு அந்த பண்பாட்டினை தொலைத்து விட்டு  சீனாவினுடைய வெட்டு மெஷின் மூலம்  அறுவடை நடக்கிறது.

 அதன் மூலம் ஒன்று அல்லது இரண்டு பேர்தான் லாபம் பெறுகிறார்கள வெட்டு மிஷின் மூலம் வெட்டப்படும் பொது வைக்கோல்களை  சிதறடிக்க செய்து விட்டு கால்நடைகளுக்கு மேய்ச்சல் இல்லை என்று மாவட்ட அபிவிருத்தி குழுவில் வந்து முறைப்பாடு செய்கின்றோம்.

எனவே வாழ்வியலுடன் பின்னிப்பினைந்த எமது பழைய வாழ்வியலை தொலைத்து  விட்டு புதிய முகமூடிகளை  போட்டுக் கொண்டு இருக்கிறோம் அகவே எமது கலாச்சாஙை;களை நாங்கள் இழந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை  அத்துடன் இறுதி யுத்தம் நடைபெற்ற போது 2009 மே மாதம் வரும் வரை இந்த புதுக்குடியிப்பு மண் எதிரியின் கையில் விழவில்லை 1984களின் பின்னர் யாழ்பாணம் திருகோணமலை மன்னர் போனற இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாது காத்தது இந்த புதுக்குடியிருப்பு மண் இந்த புதுக்குடியிருப்பு மண்ணில் நானும் பிறந்ததையிட்டு பெறுமிதம்  கொள்வதுடன் நமது கலாச்சார பண்பாடுகளை நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது எமது அனைவரினது கடமை என்றும் வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற  உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா முல்லை மாவட்டச் செயலர் றூபவதி கேதீஸ்வரன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் வடமாகான கல்வி  அமைச்சின் செயாளர் திரு இளங்கோவன்  புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலைஞர்கள்  புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள்  பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இதன்போது புதுவையாள் என்னும் வரலாற்று ஆவண நூல் ஒன்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தால் வெளீடு செய்யப்பட்டது.








பண்பாடுகளை மறந்த இனம் அழிந்ததிற்கு சமம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டுப் பெரு விழாவில்- சி.சிவமோகன்MP Reviewed by Author on August 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.