அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கலைஞ்ர்கள் 14 பேருக்கு விருதுகளும் பரிசுகளும் வட மாகாண பண்பாட்டு பெருவிழாவில்-படங்கள்


வடமாகாண பண்பாட்டு பெருவிழாவானது வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இரு அமர்வுகளாக10/11--10/2019 இரண்டு நாள் நிகழ்வாக நடைபெற்றிருந்தன.

வட மாகாண பண்பாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் காலை அமர்வு அமரர் பொன் பூலோசிங்கம் அரங்கில் இடம்பெற்றிருந்தது.

இதில் கலைநிகழ்வுகள், ஆய்வரங்கு உள்ளிட்ட நடத்தப்பட்தோடு

மாலை அமர்வு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுஜீவா ஜீபவதாஸ் தலைமையில் அமரர் வேலுப்பிள்ளை சிவசேகரம் அரங்கில் நடத்தப்பட்டது.


இதன்போது ஊடகம், கைவினை,சிற்பம்,ஓவியம்,புகைப்படம், நாட்டுக்கூத்து, நடனம், இசை, கலை உள்ளிட்ட 13 துறைகளுக்கான இளம் கலைஞர் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

 கலைஞர்கள் விபரம்

 2019 ஆண்டுக்கான இளம் கலைஞர் விருது

திரு.அங்குச்சாமி ஸ்ரீ கவியழகன் -கைவினைத்துறை -மாந்தை மேற்கு திரு.சிமியோன் பெலிக்ஸ் ஜெனிவர்  -ஓவியத்துறை -மாந்தை மேற்கு

ஓவியம் இடைநிலைப்பிரிவு
திரு. விஜயகுமார் அபிஷேக் பறுனாந்து 1ம் இடம்  புனித ஜோசவாஸ்  கலைமன்றம் முசலி
திரு.யோண்சன் சுபிக்சன் 2ம் இடம் புனித ஜோசவாஸ்  கலைமன்றம்   முசலி

ஓவியம் மேற்பிரிவு 
 செல்வி மேரி நிருபா பாவிலு 3ம் இடம் கவிதாலயா நாட்டியப்பள்ளி மன்னார் நகரம்

 கவிதையாக்கம் 

திரு.வைரமுத்து கஜேந்திரன் 3ம் இடம் கவிதாலயா நாட்டியப்பள்ளி  மன்னார் நகரம்

நாடகம்
மூவிராசப்பட்டினம் கலைப்பட்டறை  பேசாலை  மன்னார்  2ம் இடம்
செந்தமிழ் கலாமன்றம் பொந்தீவு கண்டல் முருங்கன் நானாட்டான் 3ம் இடம்

குறுநாடகவாக்கம்
திரு.பாக்கியநாதன் றெஜீஸ் பெர்னாண்டோ
மன்.அரிப்பு றோ.க.த.க பாடசாலை 2ம் இடம்

மன்னார் பாங்கு  சிரேஸ்ட பிரிவு 

புனித கார்மேல் அன்னை கலாமன்றம் ஆவணம் நானாட்டான்  2ம் இடம்
மூவிராசப்பட்டினம் கலைப்பட்டறை  பேசாலை  மன்னார்  2ம் இடம்

மன்னார் பாங்கு  கனிஸ்ட பிரிவு 

 புனித கார்மேல் அன்னை கலாமன்றம் ஆவணம் நானாட்டான் 1ம் இடம்

வட மாகாண சிறந்த நூல்பரிசு
அலுவாக்கரை நாவல் நாவலாசிரியர் திரு.S.A.உதயன்

 நிகழ்வுகளில்
ஆய்வரங்கில் மன்னார் அமுதன்
பட்டிமன்றத்தில் செந்தமிழருவி சிவஸ்ரீ தர்மகுமாரக்குருக்கள்
நடனம் கலார்ப்பணா நாட்டியப்பள்ளி மாணவிகள்
கலாச்சார உத்தியோகத்தர்கள்

 இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் I.M.கனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராசா, பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், கலைஞர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்த்னர்.

 இம்முறை கடந்த வருடங்களை விட அதிகமான கலைஞர்கள் போட்டிகளில் பங்குபற்றி பரிசுகளையும் விருதுகளையும் பெற்றிருக்கின்றார்கள் என்றால் அதற்கு கலைஞர்களின் திறமையும் அவர்களுக்கான சரியான வழிகாட்டலும் ஆலோசனைகள் வழங்கிய கலாச்சார உத்தியோகத்த்ர்களின் பங்களிப்பு பராட்டுக்குரியது இனிவரும் காலங்களிலும் இன்னும் அதிகமாக  பரிசுகளையும் விருதுகளையும்  பெற  கலைஞர்கள் அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்

தொகுப்பு -வை.கஜேந்திரன்BA-


























மன்னார் கலைஞ்ர்கள் 14 பேருக்கு விருதுகளும் பரிசுகளும் வட மாகாண பண்பாட்டு பெருவிழாவில்-படங்கள் Reviewed by Author on October 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.