அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தாழ்வுபாடு கலைஞரின் நல்ல செயல் பணத்துக்கு அல்ல நேர்மைக்கே முக்கியத்துவம்.

மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த யூட்சன் பல்டானோ என்பவர் கடந்த
வியாழக் கிழமை (03.10.2019) மன்னார் ஹற்றன் நெஷனல் வங்கி மூடப்பட்டபின் 3.50 மணியளவில் இவ் வங்கியிலுள்ள ஏரிஎம் இயந்திரத்தில் தனது ஏரிஎம் காட்டிலிருந்து பணம் எடுப்பதற்காக தனது காட்டை இயந்திரத்தினுள் நுழைத்துள்ளார்.

தனது கணக்கில் இருக்கும் பணத்தை சரிபார்த்தபின் இருந்த பணத்தில் ஓரிரு
ஆயிரம் ரூபாவை வைப்பில் வைத்து விட்டு 38 ஆயிரம் ரூபாவை எடுக்க
முயற்சித்துள்ளார்.

ஆனால் இவர் 38 ஆயிரம் ரூபாவை எடுப்ததற்கான முயற்சியை மேற்கொண்டபோது முதலில் ஒரு இலட்சம் ரூபாவும் அதன் பின் சற்று நேரத்தில் இவர் எடுக்க நினைத்த 38 ஆயிரம் ரூபாவும் அவ் இயந்திரத்திலிருந்து வெளி வந்துள்ளன.

தன்னுடைய கணக்கில் இவ்வளவு தொகை இருக்கவில்லையென அறிந்திருந்த இவர் வங்கி மூடப்பட்டிருந்ததால் உடனியாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

யாராவது இவ் பணம் சம்பந்தமாக வங்கியில் முறையீடு செய்கின்றார்களா என கவனித்து வந்தபொழுதும் தகவல் ஒன்றும் கிடைக்கப் பெறாமையால் கடந்த செவ்வாய் கிழமை (08.10.2019)  இவர் எம்பி சாள்ஸ்விடம் அறிவித்து விட்டுஇவ் ஒரு இலட்சம் ரூபா பணத்தையும் சம்பந்தப்பட்ட வங்கியில் நேரடியாக ஒப்படைத்துள்ளார்.

இன்றைய காலக்கட்டத்தில் மற்றையவர்களிடம் இருக்கும் பணத்தை கொள்ளை அடிப்பதிலேயே கண்ணும் கருத்தாக இருக்கும் சமூதாயத்தில் தனது கைக்கு எட்டிய இவ் பணம் தனக்கு ஒரு பெருந் தொகையாக இருந்தபோதும் நேர்மையுள்ள தன்மையில் இவர் செயல்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என பலரும் புகழாரம் சூட்டுவதை காணக் கூடியதாக இருக்கின்றது.
யூட்சன் பல்டானோ ஒரு கலைஞரும் பொது பணியில் ஈடுபட்டு வரும் ஒரு நபருமாவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மன்னார் தாழ்வுபாடு கலைஞரின் நல்ல செயல் பணத்துக்கு அல்ல நேர்மைக்கே முக்கியத்துவம். Reviewed by Author on October 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.