அண்மைய செய்திகள்

recent
-

நெருப்பு கோளமான விமானம்... 41 பேர் உடல் கருகி பலியான விவகாரம்: விமானிக்கு என்ன தண்டனை தெரியுமா?


ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி 41 பேர் உடல் கருகி பலியான விவகாரத்தில் அதன் விமானி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து மே மாதம் 5 ஆம் திகதி Sukhoi Superjet 100 பயணிகள் விமானம் ஒன்று Murmansk விமான நிலையத்திற்கு சென்றுள்ளது.

ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த விமானமானது கடுமையான மின்னல் தாக்குதலுக்கு இரையானது.
இதில் நிலைகுலைந்த விமானத்தை அதன் விமானி டெனிஸ் எவ்டோகிமோவ் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரியுள்ளார்.
அனுமதி கிடைத்த நிலையில், தரையிறக்கப்பட்ட விமானமானது, துரதிர்ஷ்டவசமாக ஓடுதளத்தில் மோதி நெருப்பு கோளமாக மாறியது.
விமான ஊழியர்களும் மீட்பு குழுவினரும் பயணிகள் பலரையும் உயிருடன் மீட்டிருந்தாலும் அந்த விபத்தில் சிக்கி 41 பேர் உடல் கருகி பலியாகினர்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்திய அதிகாரிகள் தற்போது அந்த விமானி மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
விமானியின் பொறுப்பற்ற செயலே இந்த விபத்துக்கு காரணம் எனவும், அவர் அவசர அவசரமாக தரையிறங்க முயற்சித்ததாலையே விமானம் தரையில் மோதியதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
மிகவும் அனுபவசாலியும் 41 வயதானவருமான விமானி டெனிஸ் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதே 41 பேரின் மரணத்திற்கும் 10 பேர் படுகாயமடைய காரணம் எனவும் வாதிட்டுள்ளனர்.
இதனையடுத்து தற்போது விமானி டெனிஸ் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உள்ளாவார் என கூறப்படுகிறது.
ஆனால் விமானி டெனிஸ் இந்த குற்றச்சாட்டுகளை கண்டிப்பாக மறுப்பார் என்றே அவர் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.




நெருப்பு கோளமான விமானம்... 41 பேர் உடல் கருகி பலியான விவகாரம்: விமானிக்கு என்ன தண்டனை தெரியுமா? Reviewed by Author on October 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.