அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபையின் 20 ஆவது அமர்வில் ஊடகவியலாளர் ஒருவர் அனுமதிக்கப்படாமைக்கு நகர பிதா விளக்கம்-படம்

'தான் நினைத்தபடியே செய்தியை அறிக்கையிடுவேன்' என தெரிவித்ததன் காரணத்தினாலேயே மன்னார் நகர சபையின் 20 ஆவது அமர்வில் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

கடந்த புதன் கிழமை இடம் பெற்ற மன்னார் நகர சபையின் 20 ஆவது அமர்வின் போது ஊடகவியலாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டார் என செய்தி வெளியாகியுள்ளது.

இவ்விடையம் தொடர்பில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனை வினவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் நகர சபையின் மாதந்த அமர்வுகளின் போது ஊடகவியலாளர்கள் சபை தலைவரின் அனுமதியுடனே அமர்வில் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் எவ்வித இடையூறுகளும் இன்றி இன்று வரை ஊடகவியலாளர்கள் மன்னார் நகர சபையின் மாதந்த அமர்வில் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த மாதம் மன்னார் நகர சபையின் 19 ஆவது அமர்வு இடம் பெற்றது.

இதன் போது ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

-இதன் போது சபையில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக வாதி பிரதி வாதங்கள் இடம் பெற்றது.

இதன் போது குறித்த மூத்த ஊடகவியலாளர் வாதி,பிரதி வாதங்கள் மக்களின் பிரச்சினைகள் குறித்த அறிக்கையிடாது, நகர சபையின் உறுப்பினர் ஒருவர் முன் வைத்த தனிப்பட்ட  கருத்துக்களை மாத்திரமே செய்தியாக அறிக்கையிட்டார்.

-குறித்த உறுப்பினரின் கருத்திற்கு சபையின் தலைவர் என்ற வகையில் நான் பதில் வழங்கினேன்.

ஆனால் எனது கருத்து பதிவு செய்யாது குறித்த உறுப்பினர் முன் வைத்த குற்றச்சாட்டை மாத்திரமே செய்தியாக வெளியிட்டார்.
இது ஊடக தர்மமா அல்லது நடு நிலை ஊடக செயல்பாடா?

குறித்த செய்தி தொடர்பாக கடந்த திங்கட்கிழமை இடம் பெற்ற மன்னார் நகர சபையின் 20 அமர்வில் வைத்து குறித்த ஊடகவியலாளரை தனிப்பட்ட முறையில் அழைத்து குறித்த செய்தி தொடர்பில் தெழிவு படுத்தியதோடு வினவினேன்.

அதற்கு பதில் வழங்கிய குறித்த ஊடகவியலாளர் 'நான் நினைத்த படி தான் எழுதுவேன்' என தெரிவித்தார்.

குறித்த பதிலின் காரணமாகவே மன்னார் நகர சபையின் 20 ஆவது அமர்வில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது என மன்னார் நகர முதல்வர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் 20 ஆவது அமர்வில் ஊடகவியலாளர் ஒருவர் அனுமதிக்கப்படாமைக்கு நகர பிதா விளக்கம்-படம் Reviewed by Author on October 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.