அண்மைய செய்திகள்

recent
-

ஒளவையாரின் கூற்றுக்களை நாம் குழந்தைகளுக்கு விதைக்க வேண்டும்- மன்னார் பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு

அறம் செய் என்ற ஒளவையின் கூற்றை அதாவது மற்றவர்களுக்கும் பகிர வேண்டும். எவரும் கொடுப்பதை ஒருபோதும் தடை செய்யாதே. இவ்வாறான கருத்துக்களை நாம் குழந்தைகள் மட்டில் விதைக்க வேண்டும். அப்பொழுது இவர்கள் நல்ல பிரஜைகளாக உருவாக ஒரு வாய்ப்பு ஏற்படும் என மன்னார் பிரதேச செயளாலர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு  இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பட்டில் மாவட்ட ரீதியில் அற நெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் மாவட்ட இந்து மக்களை ஒன்றிணைத்து ஒளவையார் விழாவும் அத்துடன் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும் சைவக்கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் செந்தமிழருவி மாஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் சனிக்கிழமை (23.11.2019) மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.


இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட மன்னார் பிரதேச செயளாலர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு  இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் இந்த ஒளவையார் விழாவுக்கும் இன்று இங்கு குழுமியிருக்கும் சிறுவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது என நாம் சிந்திப்போமானால் ஒளவையார் குழந்தைகளில் ஒருவர்.

ஒளவையார் தமிழ் மூதாட்டி. ஒளவையார் நீண்ட காலமாக தமிழ் மக்கள் அதாவது உலகத்தில் தமிழ் ஒன்று இருக்கும்வரை மனிதம் என்ற நிலை இருக்கும் வரை அறநெறி வாழ்வியல் நடைமுறையை அழகிய தமிழில் பாடவரிகளில் எமக்கு ஆணித்தரமாக எடுத்து தந்து வாழ்ந்த ஒரு மூதாட்டியாகும். இவர் பல அரசர்களின் அனுசரனைகளப் பெற்றுள்ளார். அவர்களின் அன்பை பெற்றுள்ளார்.

பல புலமைகள் பெற்ற புலவர்கள் எல்லாம் அரசரின் அரன்மனைகளை ஒட்டிய வாழ்வாக இருந்தது. அவர்கள் தங்கள் தொழில் முறைமைகளில்  புத்தகங்கள் வாசித்து அதன் மூலம் கவிதைகள் எழுதி அரசனிடமிருந்து பொன்னும் பொருளும் பெற்றுச் செல்வது அவர்களின் வழமையாக இருந்தது.

இந்த பொன்னுக்கும் பொருள்களுக்காகவும் பாடிய புலவர்களுக்கிடையே
கூழுக்காகவும் கஞ்சிக்காகவும் பாடி மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்தான் இந்த மூதாட்டியான ஒளவையார். இந்த ஒளவையார் எவ்வாறு புலமை பெற்றாரோ அவ்வாறு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசுப் பரீட்சையில் சித்திபெற்ற இவ் குழந்தைகளும் புலமைப் பரிசு பரீட்சையில் புலமை பெற்று இன்று இவ் நிகழ்வில் கௌரவிக்கப்படுகின்றனர்.
 .
இவர்கள் படிக்கலாம் ஆனால் இவர்களின் வாழ்க்கைiயில் அறநெறி ஒன்றிக்க
வேண்டும். ஆனால் இன்று அறநெறிக்கு முக்கியத்துவம் அற்ற நிலை
சென்றுகொண்டிருக்கின்றது.

இப்பொழுது கல்வி, பட்டம், பதவி, பணம் இவற்றில்தான் நாம் எமது பிள்ளைகளை நெறிப்படுத்திச் செல்லுகின்றோம். இருந்தும் அறநெறி பாடசாலைகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் பாராட்டக்கூடியவர்கள்.

வாரம் ஏழு நாட்களும் பாடசாலை பிரத்தியேக வகுப்புக்கள் என ஓடித்திரியும்
பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் வாழ்வதற்கு இந்த பிள்ளைகளுக்கு ஒரு பண்பு
அவசியம். ஒரு மொழியை பேசுவதால் ஒரு இலக்கை அடையமாட்டான். ஆனால் அந்த மொழிக்குரிய இலக்குக்குரிய பண்பாட்டை பின்பற்றுகின்றவன்தான் ஓர் இனத்தைச் சேர்ந்தவன் ஆவான்.

தமிழருக்கு என ஒரு பண்பாடு இருக்கின்றது. அது எவ்வாறு அமைய வேண்டும் என சொல்லிவைத்தவர் ஒளவையார். இந்த ஒளவையார் சொன்னதை இங்கு குழந்தைகள் சொன்னார்கள். ஒளவையார் அறத்துக்கு மிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

அறம் செய்ய விரும்பு எம்மிடம் இருப்பதை நாம் மற்றவர்களுக்கும் பகிர
வேண்டும். எவரும் கொடுப்பதை ஒருபோதும் தடை செய்யாதே. இவ்வாறான கருத்துக்களை நாம் இவ்வாறான குழந்தைகள் மட்டில் விதைக்க
வேண்டும். அப்பொழுது இவர்கள் நல்ல பிரiஐகளாக உருவாக ஒரு வாய்ப்பு
ஏற்படும்.

இந்த ஐந்தாம் ஆண்டு புலமைபரிசு பரீட்சை மாணவர்களுக்கு அல்ல பெற்றோருக்கான போட்டிகளாக க இவ் மாணவர்களுக்கு இது முதல்படி முதல் வெற்றி எனலாம். இந்த பிள்ளைகளின் எதிர்காலம் நோக்கி சைவக்கலை இலக்கிய மன்றம் இவ்வாறான செயலைச் செய்வது பாராட்டக்குரியது என்றார்.

ஒளவையாரின் கூற்றுக்களை நாம் குழந்தைகளுக்கு விதைக்க வேண்டும்- மன்னார் பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு Reviewed by Author on November 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.