அண்மைய செய்திகள்

recent
-

எமது கடந்த கால பாதையினை சற்று திரும்பி பார்ப்போமாக இருந்தால் வலிகளும்,வேதனைகளும் நிறைந்தவை-சட்டத்தரணி எஸ்.வினோதன்.

மாணவர்களாகிய உங்களின் எதிர் கால  வாழ்க்கை சிறந்ததாக அமைய கல்வியை சிறப்பாக கற்று சிறந்த மாணவர்களாக திகழ்ந்து உங்கள் இலட்சியம் நிறைவேற வேண்டும் என சட்டத்தரணி எஸ்.வினோதன் தெரிவித்தார்.

-மன்னார் மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களை மேம்படுத்தும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் இணைப்பாளர் அந்தோனி சகாயம் தலைமையில் மன்னார் சர்வோதைய மண்டபத்தில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகவு இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,,,,

எங்களுடைய கடந்த கால பாதையினை நாங்கள் சற்று திரும்பி பார்ப்போமாக இருந்தால் வலிகளும்,வேதனைகளும்,கவலைகளும் நிறைந்ததாகவே எமது பாதைகளை கடந்து வந்திருக்கின்றோம்.

அந்த வலிகளில் இருந்தும்,வேதனைகளில் இருந்தும் விடுபட வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

இலங்கையிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பல்வேறு விதமான விடையங்கள் எங்களைச் சுற்றி நெருக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளைத்தான் நாங்கள் சந்தித்துக் கொண்டு இருக்கின்றோம்.

-அவ்வாறான ஒரு சூழ்நிலையில் இருந்து நாங்கள் விடுபட வேண்டுமாக இருந்தால் எமக்கு இருக்கின்ற ஒரே ஒரு ஆயுதம் கல்வி.

-நாங்கள் பல்வேறு விதங்களிலே போராடி களைத்துப் போய் இருக்கின்றோம்.இந்த சந்தர்ப்பத்தில் எங்களை நாங்கள் தட்டி எழுப்பிக் கொள்ளுவதற்கும், எங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுவதற்கும் எமக்கு உள்ள ஒரே ஒரு சாதனம் கல்வி.

எனவே இவ் அமைப்பானது எமது மக்களுக்கு எவ்வாறான உதவிகளை செய்ய முடியுமோ அவ்வாறான உதவிகளை செய்து வருகின்றது.

குறிப்பாக கல்வி,வாழ்வாதாரம் உதவிகளை மேற்கொள்வதோடு, சட்டம்,உரிமை ரீதியாகவும் பல்வேறு சேவைகளை ஆற்றி வருகின்றனர்.

உங்களுக்கு கை கொடுக்க இன்னும் சில நல்ல உள்ளங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். எனவே உங்கள் வாழ்க்கை சிறந்ததாக அமைய கல்வியை சிறப்பாக கற்று சிறந்த மாணவர்களாக திகழந்து உங்கள் இலட்சியம் நிறைவேற வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.இதன்  போது தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








எமது கடந்த கால பாதையினை சற்று திரும்பி பார்ப்போமாக இருந்தால் வலிகளும்,வேதனைகளும் நிறைந்தவை-சட்டத்தரணி எஸ்.வினோதன். Reviewed by Author on December 31, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.