அண்மைய செய்திகள்

recent
-

மற்றவருடைய உரிமையையும்,சுதந்திரத்தையும் மதிக்கின்ற வகையில் நாங்கள் செயற்பட வேண்டும்-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்.

இந்த நாளில் மட்டும் சுதந்திரத்தை பற்றி கதைக்காமல் எப்போதும் நாங்கள் மற்றவர்களுடைய சுதந்திரத்தை மதிக்கின்றவர்களாக இருப்போமாக இருந்தால் இந்த நாட்டில் அமைதியும்,சமாதானமும் ஏற்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.

இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் தலைமை உரை நிகழ்த்துகையிலேயே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,

சுதந்திரம் என்பது நலிவடைந்தவர்களுக்கு வழிமையானவர்கள் வழங்குகின்ற ஒரு சந்தர்ப்பம்.

எனவே நாங்கள் எல்லோறும் எங்களுக்குள் ,இனங்களுக்கிடையில்,நாடுகளுக்கு இடையில், மதங்களுக்கு இடையில் பிரச்சினைகள் என்று கூறிக்கொண்டு இருக்காமல் முதலில் எங்களுக்கு இடையில் ஒருவருக்கு ஒருவர் மற்றவருடைய உரிமையையும்,சுதந்திரத்தையும் மதிக்கின்ற வகையில் நாங்கள் செயற்பட வேண்டும்.

-அவ்வாறு செயற்படும் போது நாங்கள் தான் மக்கள்,நாங்கள் தான் ஆட்சி,நாங்கள் தான் அரசு.

எங்களுக்கு இடையில் நல்ல இனக்கம் ஏற்படுகின்ற போது அது தமிழ்,சிங்களம்,முஸ்ஸீம் மக்களாக இருந்தாலும் சரி எங்களுக்குள் நாங்கள் மற்றவர்களுடைய உரிமைகளை மதிக்கின்ற தன்மையை நாளாந்தம் பின் பற்ற வேண்டும்.

இன்றைய நாளில் மட்டும் சுதந்திரத்தை பற்றி கதைக்காமல் எப்போதும் நாங்கள் மற்றவர்களுடைய சுதந்திரத்தை மதிக்கின்றவர்களாக இருப்போமாக இருந்தால் எனக்கு என்ன கிடைக்கவில்லை என்பதனை பற்றி கவலைப்படுவதை விட மற்றவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.அவ்வாறான ஒரு நிலை எங்களுக்குள் ஏற்படுகின்ற போது இந்த நாட்டில் அமைதியும்,சமாதானமும் ஏற்படும்.

இனி வரும் காலங்களில் அனைத்து இன மக்களும் இந்த நாட்டிலே அமைதியாகவும், அன்பாகவும்,ஒற்றுமையாகவும் வாழ வேண்டிய நிலை ஏற்பட வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

மற்றவருடைய உரிமையையும்,சுதந்திரத்தையும் மதிக்கின்ற வகையில் நாங்கள் செயற்பட வேண்டும்-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ். Reviewed by Author on February 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.