அண்மைய செய்திகள்

recent
-

பாராளுமன்ற தேர்தலில் மத ரீதியாக சுயேட்சயாக போட்டியிடுவது வாக்குகளை சிதைக்கும் செயற்பாடே--- சட்டத்தரணி டினேஸன்

மன்னாரில் ஒவ்வொறு மதத்தினரும் ஒவ்வொறு அரசியல் பாதையில் பயணிக்கும் பொழுது தழிலர்களுடைய தமிழ் தேசியம் சிதையுமே ஒழிய வேறு லாபம் எதுவும் இல்லை இவை எமது வாக்குகளை சிதைக்கும் செயலே என சட்டத்தரணி டினேஸன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை வருகின்ற பாரளுமன்ற தேர்தலில் சுயேட்சயாக போட்டியிடப்போவதாக ஊடக சந்திப்பின் மூலம் தெரியப்படுத்தியிருந்தனர்

குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

புதிய அரசாங்கம் எதிர்வரும் பாரளுமன்ற தேர்தலில் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளை சிதரடிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களினுடைய நிகழ்சி நிரல்களின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது

இந்த வகையில் கடந்த வருடம் மன்னார் திருகேதீஸ்வர வளைவு உடைக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் மத்தியில் மத ரீதியான பிளவுகளை சிலர் தூண்டிவருகின்றனர் அதன் மூலம் அரசியல் லாபத்தை பெற்றுக்கொள்ளலாம் என சில மத தலைவர்களும் அரசியல் வாதிகளும் என்னுகின்றனர். 

இவ் வளைவு உடைக்கப்பட்டதை கொண்டு தற்போது மன்னாரில் இரு மதத்தினரும் இரு வேறு அரசியல் பாதையில் சென்று கொண்டு இருக்கின்றனர்  தற்போது இந்து குருமார் பேரவை தாங்கள் சுயேட்சையாக எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளனர் மறு பக்கம் கிறிஸ்தவ அமைப்புக்கள் தாங்கள் தங்களுடைய குழுக்களை அமைத்து சில கூட்டங்களை நடத்தி தாங்களும் சுயமாக அல்லது கூட்டணி அமைத்தோ அல்லது அரசாங்கத்துடன் இணைந்தோ கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்

இவ்வாறக இரண்டு மதத்தினரும் இரு வேறு அரசியல் பாதைகளில் செல்வார்களாக இருந்தால் சிதையப்போவது தமிழ் தேசியமே தவிர எந்த ஒரு லாபமும் இல்லை எமது பேரம் பேசுகின்ற சக்தியை உறுதிப்படுத்த வேண்டும் என்றாலோ எமது அரசியல் உரிமைகளை பெற வேண்டும் என்றாலோ நாம் ஒன்றாக நிற்க வேண்டும்

எதிர்வரும் பாரளுமன்ற தேர்தலில் பொதுஜென பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுமாயின் எமது பேரம் பேசுகின்ற சக்தி பெரும்பான்மை இல்லாமல் போய்விடும் 

இவ்வாறு நாம் பிரிந்து நின்றோம் ஆனால் எமது பகுதியில் வேறு இனத்தவரோ வேறு மதத்தவர் ஒருவரோ பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரோ பாரளுமன்ற உறுப்பினராக வர வாய்புள்ளது

எனவே எமது மக்கள் மதத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிளவுபட்டு காணப்படுகின்ற சந்தர்பத்தில் எமது உரிமைகளையோ தீர்வுகளையோ பெற்றுகொள்ள முடியாது

இந்துக்கள் கிறிஸ்தவர்கள் என நாம் பிரிவுபட்டு நிற்கும் பொழுது எமது முப்பது வருட போராட்டம் அர்தம் அற்று போகின்றது எமது மண்ணுக்காக எமது உரிமைக்காக தங்களுடைய உயிர்களை தியாகம் செய்தவர்களின் தியாகம் பயனற்று போகின்றது

எனவே நாம் பிரிவுபடமால் பாரளுமன்ற தேர்தலில் ஒன்றாக பயனிக்க முன்னிக்கவேண்டும் என்று கோரிக்கையாக விடுக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் மத ரீதியாக சுயேட்சயாக போட்டியிடுவது வாக்குகளை சிதைக்கும் செயற்பாடே--- சட்டத்தரணி டினேஸன் Reviewed by Author on February 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.