அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் இன்று வெளியான கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 4419 -

பிரித்தானியா இன்று முதல் முறையாக மருத்துவமனை மற்றும் அதற்கு வெளியே கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன் படி இன்று வெளியான எண்ணிக்கையில் 4,419-பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதில் மருத்துமனை இறப்புக்கள் தவிர்த்து, வெளியே 3,811 இறப்புகள் அடங்கும் என்று பொது சுகாதார இங்கிலாந்து(Public Health England) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த 3811 பேரும் வைரஸ் பரவியதில் இருந்து மருத்துவமனைக்கு வெளியே இறந்தவர்கள் என்றும், மொத்ததில்(4,419 பேர் உயிரிழப்பு) 70 சதவீதம் பேர் மருத்துவமனைக்கு வெளியே, 30 சதவீதம் பேர் மருத்துவமனையில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறுகையில், இன்று வரை இங்கிலாந்து முழுவதும் கொரோனா வைரஸுக்கு 818,539 சோதனைகள் நடந்துள்ளன.

தற்போது வெளியாகியுள்ள, புள்ளிவிவரங்கள் நேற்று வரை புதிய நடவடிக்கையில் (மருத்துவமனைக்கு வெளியே பலி எண்ணிக்கை) 3,811 இறப்புகளை பதிவு செய்துள்ளோம். இந்த பலி எண்ணிக்கை மார்ச் 2 முதல் ஏப்ரல் 28 வரை என்பதால், பலி எண்ணிக்கை திடீரென்று உயர்ந்துள்ளதாக நினைக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,097-ஐ தொட்டுள்ளது, ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் சந்தித்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி(27,682 பேர்) முதல் இடத்திலும், ஸ்பெயின்(24,275 பேர்) இரண்டாவது இடத்திலும் பிரான்ஸ்(23,660 பேர்) மூன்றாவது இடத்திலும், இதற்கு அடுத்தபடியாக பிரித்தானியா இருந்தது.
தற்போது 26,097-ஐ தொட்டுள்ளதன் மூலம், ஐரோப்பிய நாடுகளில் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் எந்தவித குறைபாடுகளுமின்றி இருந்த 14 வயது சிறுவன் ஒருவனும் கொரோனா தாக்கத்திற்குள்ளாகி இறந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் இன்று வெளியான கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 4419 - Reviewed by Author on April 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.