அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் விபத்தில் உயிரிழந்த சகோதரிகள் இருவரின் சடலங்கள் நல்லடக்கம்-ஊரே சோகத்தில்.

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,பரப்பாங்கண்டல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (9)   மதியம் 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் சகோதரிகளான இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிலும்,முருங்கன் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி வந்த பிக்கப் ரக வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த குறித்த இரு பெண்களும்; உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த இரு பெண்களும் உடன் பிறந்த சகோதரிகளான சந்தியோகு லிண்டா (வயது-40), மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றார்.

மற்றையவர் சந்தியோகு டெரன்சி (வயது-25) மன்னார் அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றி வருகின்றனர்.
-

குறித்த இருவரும்   மன்னாரில் இருந்து கட்டையடம்பன் பகுதியில் உள்ள அவர்களுடைய வீட்டிற்கு மோட்டார் சைக்கிலில் பயணித்த போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

-இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு குறித்த இரு சடலங்களும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது.

-குறித்த பிரதேச மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளதோடு,இறுதி நல்லடக்கத்தின் போது பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.


மன்னார் விபத்தில் உயிரிழந்த சகோதரிகள் இருவரின் சடலங்கள் நல்லடக்கம்-ஊரே சோகத்தில். Reviewed by Author on April 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.