அண்மைய செய்திகள்

recent
-

21 மாவட்டங்களுக்கு இன்று மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் -


21 மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் இன்று இரவு 8 மணி முதல் 11 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் கொரோனா வைரஸ் அபாய வலயமாக கருதப்படும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவிப்பு வரை நீடிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

மேல் மாகாணம் மற்றும் புத்தளத்திற்கு தற்போது வரையிலும் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களிலும் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அனுமதி வழங்கப்படாதென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பலர் சுயதனிமைப்படுத்தலின் போது சட்டங்களை மீறுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அனைத்து பகுதிகளிலும் மக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு புலனாய்வு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவ்வாறு சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
21 மாவட்டங்களுக்கு இன்று மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் - Reviewed by Author on May 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.