அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலையில் உள்ள வீடு ஒன்றினுள் அத்து மீறி நுழைந்த மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் புதையல் தோண்டிய வீடியோ வெளியானது.

மன்னார் பேசாலை கடற்கரை வீதியில் உள்ள வீடு ஒன்றில் எவ்வித அனுமதியும் இன்றி மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆரச்சி தலைமையிலான குழுவினர் கடந்த ஞாயிற்றுக் கிழமை  இரவு 11 மணியளவில் அத்துமீறி நுழைந்து அகழ்வு பணியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பான வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

இவ்விடையம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,

மன்னார் பேசாலை கடற்கரை வீதியில் பழமை வாய்ந்த மாடி வீடு ஒன்று உள்ளது. குறித்த வீட்டின் மேல் பகுதியில் குடும்பம் ஒன்று வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த வீட்டின் கீழ் பகுதியில் புலிகளினால் தங்கம் மற்றும் பெறும் தொகையான பணம் புதைத்து வைத்துள்ளதாக தெரிவித்து மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆரச்சி தலைமையிலான குழுவினர் கடந்த ஞாயிற்றுக் கிழமை  இரவு 11 மணியளவில் குறித்த வீட்டினுள் அத்து மீறி நுழைந்து குறித்த வீட்டின் மேல் வசித்தவர்களை கடுமையாக அச்சுரூத்தி உள்ளனர்.

-பொலிஸாரின் அச்சுரூத்தல் காரணமாக குறித்த வீட்டில் இந்த இருவர் திடீர் என மயக்கம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

-இந்த நிலையில் பொலிஸாருடன் வருகை தந்த பூசாரி ஒருவரும், ஏனையவர்களும் இணைந்து குறித்த வீட்டின் உள் பகுதியில் தரையை உடைத்து அகழ்வு பணிகளை மேற்கொண்டனர்.
-இந்த நிலையில் பேசாலை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பை தெரிவித்த நிலையில் பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆரச்சி தலைமையிலான குழுவினர் தங்களை காப்பாற்றிக்கொள்ளும் வகையில் வீட்டில் ஆயுதம் உள்ளதாக கூறி குறித்த வீட்டில் உள்ள ஒருவரை கைது செய்து சென்றுள்ளனர்.

-நீதிமன்றத்தின் அனுமதி இன்றி பேசாலை பொலிஸாருக்கு ஆரம்பத்தில் தகவல் வழங்காது இரகசியமான முறையில் இரவு நேரத்தில் வந்து குறித்த பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பேசாலை மக்கள் அதிர்ப்பி தெரிவித்துள்ளனர்.

மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆரச்சி தலைமையிலான குழுவினர் குறித்த வீட்டில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நகை மற்றும் பணத்தை அகழ்வு செய்து கொண்டு செல்லவே வந்திருக்களாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு      விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு,   சந்தேகத்துக்குரிய வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

-இன்றைய தினம் புதன் கிழமை மாலை குறித்த பகுதியில் மன்னார் நீதவான் முன்னிலையில் அகழ்வு பணி இடம் பெற உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆரச்சி தலைமையிலான குழுவினர் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதி இன்றி குறித்த வீட்டினுள் அத்து மீறி நுழைந்து அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள வீடியோ வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 


மன்னார் பேசாலையில் உள்ள வீடு ஒன்றினுள் அத்து மீறி நுழைந்த மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் புதையல் தோண்டிய வீடியோ வெளியானது. Reviewed by Author on July 15, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.