அண்மைய செய்திகள்

recent
-

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவுறுத்தல்

 மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவுறுத்தல்



மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும்.


இதன்போது, தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.



அறிவுறுத்தல்

இதன்போது மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், மின்னல் ஏற்படும்போது, வீட்டிற்குள் இருக்குமாறும், மரங்களுக்கு அடியில் இருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.



இடியுடன் கூடிய மழைபெய்யும் போது வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிகளைத் தவிர்க்கவேண்டுமெனவும், கம்பி தொலைபேசிகள் மற்றும் இணைக்கப்பட்ட மின்சார சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டுமெனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மிதிவண்டிகள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்தவெளி வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டுமெனவும், அவசர உதவிக்கு உள்ளூர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவுறுத்தல் Reviewed by Vijithan on November 22, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.