நெடுந்தீவு மக்களுக்கு அவசர அறிவிப்பு
நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல்வழியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிகசிகிச்சைக்காக நோயளர்களை இடமாற்றீடு செய்ய முடியாத நிலை வடகிழக்கு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரன காலநிலை மாற்றம் காரணமாக தொடர்வதாக கடற்படையினர் தெரிவித்துள்ளதாக நெடுந்தீவு வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
எனவே நெடுந்தீவு மக்கள் அனைவரையும் விபத்துக்கள், பாம்புகடி மற்றும் தவிர்க்ககூடிய நோய்நிலைகளை குறைத்து வீடுகளில் அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது
இதேவேளை காலநிலை சீரின்மை காரணமாக நெடுந்தீவுக்கான நோயாளர் கடற் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு வைத்திய அதிகாரியினால் நோயாளிகளை யாழ்ப்பாணத்திற்கு மேலதிக சிகிச்சைக்காக வான் வழியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
November 26, 2025
Rating:


No comments:
Post a Comment