அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் ஐவருக்கு மரணதண்டனை

 2019 ஆம் ஆண்டில் 151 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நபர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உறுதி செய்துள்ளது.


அந்த காலப்பகுதியில், இலங்கை கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாக, இது கருதப்பட்டது.



மரண தண்டனை


இந்த குற்றத்துக்கான மரண தண்டனை, 2023, செப்டம்பர் 27, அன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி வழங்கப்பட்டது.


குற்றப்பத்திரிகையில் உள்ள மூன்று குற்றச்சாட்டுகளிலும் ஐந்து குற்றவாளிகளும் குற்றவாளிகள் என்று மேல் நீதிமன்றம் கண்டறிந்து, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் மரண தண்டனை விதித்தது.



நீர்கொழும்பு, கட்டுவாவை சேர்ந்த ஐந்து பேரே இந்த தண்டனைக்கு உள்ளானவர்களாவர்.


இந்த நிலையில், மேல் நீதிமன்றத்தின் கண்டுபிடிப்புகள் அல்லது விதிக்கப்பட்ட தண்டனையில் தலையிட எந்த அடிப்படையும் இல்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது




இலங்கையில் ஐவருக்கு மரணதண்டனை Reviewed by Vijithan on November 22, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.